பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு எதிர்மறை விளைவுகளைத் தரக்கூடும் என நம்பும் அதே வேளை மற்றவர்கள் பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது எனக் கருதுகின்றனர். எனினும் பழுத்த வாழைப்பழம் சரியாகப் பழுக்காத பழத்தைவிட சிறந்ததா என அறிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
ஆச்சரியமாக பழுத்த பழம் பழுக்காத பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்து காணப்பட்டது.
சில ஜப்பானிய ஆய்வாளர்கள் கருத்துப்படி பழுத்த வாழைப்பழமானது பழுக்காத வாழையை விட அதிக வைட்டமின்களையும், புரோட்டீன்களையும், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும்பாலும் ஜப்பானிய மக்கள் நன்கு பழுத்த பழங்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றனர்.
பெரும்பாலும் நன்கு பழுத்த வாழைப் பழங்களின் மீது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த கரும்புள்ளிகள் டிஎன்எப் எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை வாழைப்பழம் உருவாக்குகிறது. இது உடம்பிலுள்ள அசாதாரணமான மற்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது.
பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் ஒரு கப் பழுத்த வாழைப்பழம் குறைந்தது சுமார் ௦.55 மிலிகிராம் அளவு வைட்டமின் பி6 கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாலைக்குத் தேவைப்படும் வைட்டமின் பி6 அளவில் 42 சதவிகிதம் ஆகும். பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது. பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும். தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.