வெளிநாட்டவர்களுக்கு மேலதிமாக 15 ஆயிரம் வீசா வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீன்பிடி, சுற்றுலா, ஹோட்டல் மற்றும் ஏனைய தொழில்களில் தற்காலிக சேவை செய்வதற்காக வெளிநாட்டவர்களுக்கு இவ்வாறு வீசா வழங்குவதற்கு தீமானிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு தொழிற்துறைகளில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கமைய கண்டிப்பான குடியேற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் ட்ரம்பின் ஆட்சியினால் இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தற்காலிக தொழில் வீசா விவசாய துறைகளுக்காக வழங்கப்படுகின்ற நிலையில் தொழிலாளர் தரத்திற்கு ஏற்ப தொழில் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.