ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்

feltman

ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை கொழும்பு வரும் அவர், வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் என்றும், இதன் போது கிழக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவவர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் , ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சந்திப்பார்.

அத்துடன், கொழும்பில் அவர் சமாதான அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

கிழக்கு மாகாணப் பயணத்தின் போது, மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரைச் சந்திக்கவும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் திட்டமிட்டுள்ளார்.

ஜெப்ரி பெல்ட்மன் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதமும் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.