சங்கமித்ரா பற்றிய குஸ்புவின் சர்ச்சை பேச்சு

சங்கமித்ரா படத்தில் இருந்து நடிகை சுருதி விலகியதை அடுத்து, அவரை விமர்சித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராக இருந்த சங்கமித்ரா படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். அது கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், ஜெயம் ரவி மற்றும் ஆர்யா கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இதற்கிடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின் சென்னை வந்த சுருதி, சங்கமித்ரா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும் இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறி இருந்தார்.

இது பற்றி ட்விட்டரில் நடிகை குஷ்பு கூறியதாவது, “இந்தியாவிலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகிறது சங்கமித்ரா திரைப்படம். இது போன்ற படங்கள் சரியான திட்டமிடல் இல்லாமல் இயக்க முடியாது.

இதற்கான வேலைகள் கடந்த இரண்டு வருடமாக நடந்து வருகிறது. இது பற்றி போதிய அறிவு இல்லாதவர்கள் இன்னும் ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை என கூறிவருகின்றனர்.

இந்த மாதிரி பெரிய பட்ஜெட் படங்களில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் ஸ்க்ரிப்டிலேயே முடிந்துவிடும், மீதம் உள்ள ஒரு பகுதி ஷூட்டிங் வேலைகளை அதன் பின்னர் தான் தொடங்குவோம்.

உங்களது குறைகளை மறைக்க அடுத்தவரை குறை கூற வேண்டாம். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்த பெண்ணிடம் கொஞ்சம் தொழில் நுட்ப அறிவை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் ட்விட்டரில் காட்டமாக கூறி இருந்தார்.