கூட்டமைப்பு – ஐ.தே.க இணைந்து மத்தியில் ஆட்சி?!

ranils

தேசிய அரசாங்கத்தில் இருந்து நாம் வெளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்க அங்கத்துவமாக்கினால் நாட்டின் ஐக்கியம் கேள்விக்குறியாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது.

அரசாங்கத்தில் அமர்வதா அல்லது எதிரணியில் அமர்வதா என்பதை ஆண்டு இறுதியில் தீர்மானிப்போம் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.