“பொறுமைக்கும் எல்லை உண்டு” – இலங்கை அரசுக்கு ஐ.நா எச்சரிக்கை!

ben

இலங்கை அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிப் ப­டுத்­தாமல் இருக்­கின்­றது. முன்­னேற்றமானது தாம­த­ம­டைந்­துள்­ளது என்­ப­துடன் அந்த நடவடிக்கை கள­ரீ­தி­யாக நிறுத்­தப்­பட்­டு­விட்­டது என்றே கூற­வேண்டும். தற்­போ­தைய கள நிலை­மையை பார்க்கும் போது அர­சாங்கம் குறிப்­பிட்ட கால வரைய­றைக்குள் நீதியை நிலை­நாட்டும் என எதிர்­பார்ப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த விட­யத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் பொறு­மைக்கும் எல்லை இருக்­கின்­றது என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தத்தை ஒடுக்கும் போது அடிப்­படை சுதந்­திரம் மற்றும் மனித உரி­மையை பாது­காப்­பது தொடர்­பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரி­வித்தார்.

இலங்கை அர­சாங்கம் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை நிலை­நாட்­டா­விடின் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சலு­கை­களை இலங்கை இழக்­கலாம். ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உள்ள இந்த விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு செல்­லலாம். இவ்­வாறு பல நிலை­மைகள் ஏற்­ப­டலாம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பயங்­க­ர­வாத தடை­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் பல்­வேறு வகை­யான சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். உல­கி­லேயே மிகவும் கீழ்த்­த­ர­மான சித்­தி­ர­வதை நிலைமை இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­ய­வேண்டும். அல்­லது பிணையில் விடு­விக்­க­வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன் என்றும் அவர் கூறினார்.

பயங்­க­ர­வாத தடை சட்­ட­மா­னது இன்­று­வரை தமிழ் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும் ஒரு சட்­ட­மா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது புதி­தாக உரு­வாக்­கப்­ப­டு­கின்ற சட்­ட­மூலம் தொடர்­பா­கவும் விமர்­ச­னங்கள் உள்­ளன. இந்த விட­யங்­களை ஆராய்ந்து சர்­வ­தேச தரத்­திற்கு அமைய புதிய சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வேண்­டு­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமை ஊக்­கு­விப்­புக்கள் தொடர்பில் மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் நேற்று தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அதில் தனது மதிப்பீடுகளை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.