இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு

india

இலங்கையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவை உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கியமான விடயங்கள், இராணுவ பயிற்சி, திறமை முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் இராணுவ தளபதியினால் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் இந்தியா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ஜி.எஸ் க்லேயார் மற்றும் இராணுவ சேவை பணியகத்தின் கேர்ணல் உதய குமார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.