வித்தியா கொலை வழக்கில் சிக்கிய பிரதி பொலிஸ் மா அதிபர்! அவரை காப்பாற்ற புதிய நாடகம்

vithya

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பதிபா மஹானாம நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லலித் ஜயசிங்க மற்றும் பதிபா மஹானாம ஆகிய இருவரும் நண்பர்களாகும். இதனால் கடந்த 17ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று லலித் ஜயசிங்கவை, மஹானாம சந்தித்துள்ளார்.

இதன்போது நண்பரை காப்பாற்றுவதற்காக திட்டம் ஒன்று வகுக்கப்பட்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட லலித் ஜயசிங்கவை ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது அவர் பயணித்த வாகனம் இடையில் விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்ற விசாரணை அதிகாரியினால் லலித் ஜயசிங்கவை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக போலி முறைப்பாடு ஒன்றை தயாரிப்பதற்கு பதிபா மஹானாம ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன் ஊடாக குற்ற விசாரணை பிரிவையும், பொலிஸ் மா அதிபரையும் அச்சுறுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலோசனை செவிமடுத்த லலித் ஜயசிங்க, தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இடம்பெற்ற இன்னும் ஒரு சம்பவத்தை இதற்குள் உள்ளடக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

லலித் ஜயசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கடந்த எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அங்கு அவர் வித்தியா கொலையுடன் தொடர்புபட்டமையினால் தனக்கு யாழ். சிறையில் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் எனவே அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு உத்தரவிடுமாறு லலித் ஜயசிங்கவின் வழக்கறிஞர் நீதிமன்றில் கோரியிருந்தார்.

நீதிபதி அதற்கு அனுமதி வழங்கியிருந்தார். பின்னர் லலித் ஜயசிங்கவை சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து செல்லும் போது, குறித்த சிறைச்சாலை மாற்றும் உத்தரவில் நீதிபதி கையொப்பமிடவில்லை என்ற விடயம் இடையில் அவதானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வாகனம் மீண்டும் ஊர்காவற்துறைக்கு சென்று கையொப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் அநுராதபுரம் நோக்கி சென்றுள்ளது.

இந்த சம்பவம் தன்னை இடையில் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் ஒரு பகுதியாக கூற முடியும் லலித் ஜயசிங்க, மஹானாமவிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய லலித் ஜயசிங்கவின் குற்றத்தை தூரமாக வைத்துவிட்டு “லலித் ஜயசிங்கவை கொலை செய்ய சூழ்ச்சி” என்ற நாடகத்தை முன்கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்வதற்கும், ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும், உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.