நடிகை ஹன்சிகா வீழ்ந்த தனது மார்கெட்டை நிலை நாட்டிக்கொள்ள பிரபுதேவாவுடன் நடித்து வரும் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் தனது சினிமா பயணத்தை பற்றி ஹன்சிகா கூறியதாவது, பல நடிகைகள் தங்களது 14 அல்லது 15 வயதில் நடிக்க வருகிறார்கள்.
நான் அதைவிட சிறுவயதிலேயே எனது நடிப்பை தொடங்கிவிட்டேன். இப்போது எனக்கு 25 வயது ஆகிறது. எனக்கு இன்னும் வயது இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைக்க முடிவு செய்திருக்கிறேன். சங்கமித்ரா படத்தில் நடிக்கிறேனா என பலரும் என்னை கேள்வி கேட்கின்றனர். ஆனால், அதுபற்றி இப்பொழுது நோ கமென்ட்ஸ் என ஹன்சிகா கூறினார்.