யாழ். குடாநாட்டில் ஆயிரம் மில்லியன் ரூபாவில் புதிய சொப்பிங் கொம்பிளக்ஸ்!!

யாழ். குடாநாட்டில் ஆயிரம் மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட எதிர்பார்க்கும் சொப்பிங் கொம்பிளக்சினை சந்திரத்துச் சந்தியில் அமைப்பதற்கு நேற்றைய மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வட மாகாணத்தில் ஓர் சொப்பிங் கொப்பிளக்ஸ் அமைப்பதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த்தது. இதற்கான அமைவிடம் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு யாழ். நகரில் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த கொம்பிளக்ஸ் அமைவிடம் தொடர்பில் ஏப்பிரல் மாத முற்பகுதியில் இடம்லெற்ற கலந்துரையாடலில் செம்மணிப் பகுதியில் அமைப்பற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்பிரகாரம் குறித்த கட்டிடத்திற்கான வரைபடம் தயாரித்தவேளையில் அதன் அமைவிடம் தொடர்பில் சர்ச்சை எழுந்தமையினால் தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த கட்டிட அமைவிடம் தொடர்பான அமைவிட சர்ச்சை ஏற்பட்டது. இதனால் மாவட்ட அரச அதிபர் தலமையில. இதன் அமைவிடம் தொடர்பில் நேற்றைய தினம் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்மெற்றது. இதன் பிரகாரம் இதன் அமைவிடத்திற்காக பல இடங்களை ஆராயப்பட்டு அதன் இறுதியில் சத்திரத்துச் சந்தியில் தற்போதுள்ள சிறிய சந்தை அமைவிடமான 1.5 ஏக்கர் நிலத்தினில் இதனை அமைக்க முன்மொழியப்பட்டது.

குறித்த அமைவிடத்திற்கான பரிசீலணையின் பின்னர் மேற்படி கொம்பிளக்ஸ் அமைப்பதற்கான இட அனுமதி சிபார்சு செய்யப்பட்டது.