ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று சகோதரர்கள் இணைந்து ஒரு சகோதரரை கத்தியால் குத்தியுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று 9.15 மணியளவில் எஹெலியகொட பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய மொஹமட் பசீமி என்ற நபரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.