வித்தியா கொலை வழக்கு விசாரணை! சுவிஸ் குமார் தொடர்பில் புதிய தகவல் வெளியீடு

v4

மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் யாழ் தலைமை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய நேற்று சாட்சியம் அளித்தார்.

இதன்போது யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகன், சுவிஸ் குமார் என்பவரை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக அழைத்து வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்

தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டிற்காகவே சுவிஸ் குமார் அழைத்து வரப்பட்டதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் அவர் நேற்றைய தினம் சாட்சி வழங்கியுள்ளார்.

அவ்வாறான முறைப்பாடு ஒன்று மேற்கொண்டு சுவிஸ் குமார் என்பவரை யாழ் சட்ட வைத்திய அதிகாரி முன்னால் ஆஜர்படுத்துமாறு வடமாகாண பொறுப்பதிகாரியான சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர், தன்னிடம் ஆலோசனை வழங்கியதாக ஸ்ரீகஜன் தன்னிடம் குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் நேற்றையதினம் ஆரம்பமானது.

யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் மன்றில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.