நாசாவின் கனவுத் திட்டமான ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம்’ என்பது 2030-ம் ஆண்டு வரையில் சாத்தியமில்லை என நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ஈசா,
இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்தின் தன்மை குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அவ்வப்போது புதிய புதிய தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.