சிறிலங்கா படையினருக்கு கையாளப்படும் வழிமுறைகள் ஏனைய நாட்டு படையினருக்கும் : ஐ.நா

u

ஐ.நா அமைதிப்படைக்கு படையினரைச் சேர்த்துக் கொள்ளும் போது, சிறிலங்கா படையினருக்கு கையாளப்படும் வழிமுறைகள் ஏனைய நாடுகளின் படையினரை சேர்க்கும் போதும் கையாளப்படும் என்றும், அவர்கள் தமது நாடுகளில் எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக சிறிலங்கா படையினரை தெரிவு செய்யப்படும் விடயத்தில் கையாளப்படும் ஆணுகுமுறை தொட்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பதிலளிக்கையில்,

“அமைதிப்படைக்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் படையினரை சேர்க்கும் போதும் அவர்கள் நாட்டில் எந்தப் பிரச்சினைகளுடனும் தொடர்பில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு செய்ய முனைகிறோம்.

நிச்சயமாக சிறிலங்கா படையினருக்கு  மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு முறை, ஏனைய நாடுகளிலும் கையாளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.