பாடசாலைக்கு வந்து போகும் வெள்ளை நாகம்

வவுனியா – இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலய ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நாகம் வந்து செல்வதால் மாணவர்கள் அச்சத்துடனனேயே கல்வி கற்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி பயிலும் இப் பாடசாலை போதிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு ஓலைக் கொட்டகையுடன் இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் இந்தப் பாடசாலையின் ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நிற நாக பாம்பு ஒன்று அடிக்கடி வந்து செல்வதாகவும் இதனால் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்க வேண்டியுள்ளதாகவும், ஆசிரியர்களும் அச்சத்துடனேயே கல்வியைப் போதிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.