பெண்ணொருவரின் அறுவைச் சிகிச்சையின் போது நடந்த விபரீதம்

r2

வத்துபிட்டி மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, நோயாளிக்கு ஏற்படவிருந்த விபரீதத்தை மருத்துவர்கள் தவிர்த்துள்ளனர்.

அந்த மருத்துவனையின் புதிய அறுவைச் சிகிச்சை அறையில் பெண்ணொருவருக்கு வயிற்றில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக அந்த மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால், 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மின் விநியோகம் வழமைக்கு திரும்ப ஒன்றரை மணித்தியாலம் சென்றுள்ள நிலையில்,மருத்துவர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை, நோயாளரின் அருகிலேயே மருத்துவர்கள் இருந்துள்ளதுடன், மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய பின்னர் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அந்த சந்தர்ப்பத்தின் போது விரைவாக மின்சார சபைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு மின் விநியோகத்தை பெற்று கொண்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.