கொழும்பில் 4 ஆயிரம் போலி யாசகர்கள் !

y1

யாசகம் செய்வதை (பிச்சையெடுத்தல்) ஒரு தொழிலாகக்கொண்டு 4 ஆயிரம் பேர் செயற்பட்டுவருகின்றனர் என்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இவர்களுள் பெரும்பாலானவர்கள் கொழும்பில் வசிக்காதவர்கள் என்றும், வெளியிடங்களிலிருந்து வந்தே மிகவும் சூட்சுமமான முறையில் யாசகம் செய்து அதைத் தொழிலாக நடத்திவருகின்றனர்.

இவர்களுள் சிலர் ஒரு வலையமைப்பாக செயற்படுவதுடன், அவர்களை வழிநடத்தக் குழுவொன்று இருக்கின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கொள்ளை உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களில் இவர்களில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், மேற்படி யாசகர்களால் சாதாரண மக்களுக்குப் பல வழிகளிலும் இடையூறுகள் ஏற்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.

எனவே, இனிவரும் நாட்களில் இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேவேளை, கொழும்பில் 660 பேர் மட்டுமே உண்மையான யாசகர்களாக இருக்கின்றனர் எனக் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.