டெங்கு இரத்த பரிசோதனை அறிக்கையை இரண்டு மணித்தியாலங்களுக்குள் வழங்குமாறு பிரதமர் கோரிக்கை

d1

டெங்கு தொடர்பான இரத்த பரிசோதனை அறிக்கையை இரண்டு மணித்தியாலங்களுக்குள் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்களிடம் கோரியுள்ளார்.

சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரத்த பரிசோதனைக்கு அரச வைத்தியசாலைகள் 90 நிமிடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு இரத்த பரிசோதனைக்காக தனியார் துறையினர் எட்டு மணித்தியாலங்கள் வரையில் எடுத்துக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, நோயை கண்டறிந்து கொள்ளும் காலத்தை குறைத்துக் கொள்ளும் நோக்கில் பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும், டெங்கு இரத்த பரிசோதனை அறிக்கையை இரண்டு மணித்தியாலங்களில் வழங்குமாறு பிரதமர் எழுத்து மூலம் தனியார் துறையினரிடம் கோரியுள்ளார்.