முப்பது லட்சம் கார்களை திரும்பப் பெறும் பென்ஸ் நிறுவனம்

b

மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த ஆறு ஆண்டுகளில் விற்பனை செய்த அனைத்து கார்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த ஆறு வருடங்களில் விற்பனை செய்த அனைத்து டீசல் மொடல் கார்களின் உமிழ்வை மேம்படுத்துவதற்காக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

வாகனங்களை தயாரிக்கும் ஜெர்மனியை சேர்ந்த டையம்லெர் இந்த நடவடிக்கை மூலம் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறுவதை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதை செய்து முடிக்க மொத்தம் €220 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சில ஆயிரம் கோடிகள் ஆகும்.

எனினும் வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் இன்ஜின் கொண்ட அனைத்து கார்களும் யூரோ 6 தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதால் புதிய மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

எனினும் இந்த பாதிப்பில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

எனினும் ஜெர்மனியில் மட்டும் 10 லட்சம் வாகனங்களும், ஐரோப்பாவில் 20 லட்சம் வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு லண்டனில் மட்டும் 170,000 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.