புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பொலிஸார் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வித்தியா கொலை வழக்கில் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த போது, அவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். அத்துடன், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறும் ஊர்காவற்றுறை நீதிவானிடம் புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதவான், ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீகஜன் அண்மையில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறீகஜனை கைது செய்வதற்கு சி ஐ டி தீவிரம்
சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் சிறீகஜனைக் கைது செய்வதற்கு தாம் நடவடிக்கை எடுத்த போது, அவர் தலைமறைவாகி விட்டதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
அதையடுத்தே அவர் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை காப்பாற்றும் நோக்கில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் ஒரு அணியால் மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கும், சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனுக்கும் இந்த கொலை விடயத்தில் நல்ல தொடர்பு இருந்துள்ளது .
அந்த அந்த வகையில்தான் இந்த கொலை வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் சிக்குவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளதாகவும் குறைந்து 15-20 வருட சிறை செல்லும் நிலையுள்ளது.
அதனால் இந்தியா சென்று அங்கிருந்து ஒரு நாட்டுக்கு செல்லும் நோக்கில்தான் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் ஒரு முயற்சி செய்துள்ளார்.
இப்போது சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் இந்த வழக்கில் நீதி மன்றில் நிறுத்தப்பட்டால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சிக்க மிக அதிக வாய்ப்புள்ளது. அதனால் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை ஏதாவது செய்து விட வேண்டிய தேவையுள்ளது.
முக்கியமான சாட்சி
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சாட்சியம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த சாட்சியத்தின் போது பொலிஸ் தரப்பில் எல்லோரும் சுற்றவாளிகளாகவும் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் மட்டுமே சகல குற்றங்களையும் செய்தது போன்று சாட்சியை அமைக்கலாம். அதாவது சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன்தான் இந்த கூட்டு பாலியல் கொலையை மறைத்தார், குற்றவாளிகளை தப்ப வைத்தார் போன்று சாட்சி அமையலாம்.
அதாவது பொலிஸ் தரப்பின் முழுக் குற்றமும் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் மீது வந்து விழக் கூடிய நிலையுள்ளது. அந்தளவு சாட்சிகளை திசை திருப்பியிருக்க முடியும் .
பிரதி பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றும் நோக்கம்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை காப்பாற்ற வேறு ஒரு முயற்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பதிபா மஹானாம நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
லலித் ஜயசிங்க மற்றும் பதிபா மஹானாம ஆகிய இருவரும் நண்பர்களாகும். இதனால் கடந்த 17ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று லலித் ஜயசிங்கவை, மஹானாம சந்தித்துள்ளாராம்.
அது ஒரு புறம் இருக்க சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் மீது சகல குற்றங்களையும் சுமத்தி அவரை சிக்க வைக்கும் போது நீதி மன்றில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் அரச தரப்பு சாட்சியாக மாறும் நிலை வரலாம்.
அதனால் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை ஒரு தரப்பு கொலை செய்து விட்டு சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு நிலையை உருவாக்கலாம் .
அதனால் பொலிசில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் சரண் அடையலாம். அதுதான் பாதுகாப்பு. அல்லது சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை முற்றாக இல்லாமல் செய்து என்றுமே, எங்குமே காணமுடியாமல் போகலாம்.
அதன் மூலம் இந்த வழக்கில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க முற்றாக விடுதலை பெறலாம்.
இந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்காவுக்கான மிக முக்கிய சாட்சி .
அதனால் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை கடல் வழியாக தப்பிக்க வைக்க அல்லது தற்கொலை என்று சொல்ல அல்லது முற்றாக இன்ஸ்பெக்டர் சிறீகஜனை அழித்து ஒழிக்க சாட்சியே இல்லாது புதைத்து விட மிக அதிக வாய்ப்புள்ளது.
வடக்கில் எத்தனையோ கொலை நடந்துள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை என்றுமே, யாருமே, எப்போதுமே கண்டு கொள்ள முடியாதவாறு செய்து விட மிகவும் அதிகமான வாய்ப்பு உள்ளது, பார்க்கலாம்.