கொஞ்ச காலமாகவே கமலை சீண்டி பார்த்த அமைச்சர்களை நேற்று முன்தினம் கமல் ஒரு வழி ஆக்கி விட்டார்.
எந்தெந்த துறையில் ஊழல் நடக்கிறதோ, அதை சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாகவே தமிழக இணைய தளம் மூலம் புகார் அளிக்க சொல்லி அறிக்கை விடுத்திருந்தார்.
கடிதம் மூலம் புகார் தெரிவித்தால் கூட கிழித்து போட்டு விடுவார்கள், இந்த முறையில் தெரிவிக்கும் புகாரை எப்போது வேண்டுமானாலும் ஆதரமாக எடுத்து பார்க்க முடியும்.
ஒரு வேலை அந்த கோப்புகளை அழித்து விட்டாலும் கூட, அதனையும் நோண்டி எடுக்க தொழில்நுட்பம் வந்து விட்டது.
கண்டிப்பாக பல லட்சம் புகார்கள் வரும் என்பதை தெரிந்து கொண்ட தமிழக அரசு தற்போது தமிழக எம்.எல்.ஏ-க்களின் தகவலை அதிரடியாக நீக்கி உள்ளது.
முன்பு அவர்களின் மின்னஞ்சல், தொலைபேசி விவரம் போன்றவை இருக்கும், தற்போது முற்றிலுமாக நீக்கபட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் காரணங்கள் வெளியாகி உள்ளது.
ஒரு வேலை அணைத்து தரப்பில் இருந்தும் இலட்ச கணக்கில் புகார்கள் குவியும் போது அது ஆளுநரின் பார்வைக்கு செல்லும்.
தமிழக இணையதளத்தை தொடர்ந்து ஆளுநருக்கும் மனுக்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழக அரசிற்கு எதிராக வலுவான ஆதாரம் உருவாகி வருகிறது.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்ததால் தான், அந்த தகவல் நீக்கம் என்று கூறப்படுகிறது.
இருந்தபோதிலும், தமிழக இணையதளத்தை விடுத்தது நேரடியாகவே கவர்னருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
ஒரு கட்ட எல்லையை இந்த புகார்கள் தாண்டும் போது, ஆளுநரால் முடிவெடுக்காமல் இருக்க முடியாது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து நேரடியாகவே முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடனே புது சிக்கல் உருவெடுத்துள்ளதால் அதிமுக ஆட்சி ஆட்டம் காணும் நிலையில் உள்ளது தமிழகத்தில்.