ஹர்மன்பிரீத் கவுர் நேற்று தனது 171 ரன்களில் 20 பவுண்டரிகள் 7 சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்த இன்னிங்ஸ் குறித்து ட்விட்டரில் அவருக்கு பலரும் புகழாரம் செலுத்தியுள்ளனர்.
இயன் பிஷப்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய இன்னிங்ஸ் இது.
சார்லட் எட்வர்ட்ஸ்: வணங்குகிறேன். நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்.
யுவராஜ் சிங்: 115 பந்துகளில் 171 ரன்கள்.. எந்த ஒரு கிரிக்கெட் வடிவத்திலும் காணக்கிடைக்காத நம்ப முடியாத இன்னிங்ஸ் வாழ்த்துக்கள்.
கபில்தேவ்: மகளிர் இந்திய கிரிக்கெட் அணி இப்படி ஆடுவது பெருமை அளிக்கிறது. பெரிய வெற்றிக்கு வாழ்த்துக்கள். மறக்க முடியாத இன்னிங்ஸ்.
ரவி சாஸ்திரி: ஹர்மன்பிரீத் கவுர் ராக்ஸ்டார். மெய்சிலிர்க்கவைக்கும் இன்னிங்ஸ்!
சச்சின் டெண்டுல்கர்: மிகப்பெரிய இன்னிங்ஸ்!
லஷ்மண்: என்ன ஒரு தனித்துவமான இன்னிங்ஸ்! ஆச்சரியகரமான திறமை வெளிப்பாடு, துல்லியமான ஹிட்டிங், வணங்குகிறேன் ஹர்மன்.
அனில் கும்ப்ளே: பொறுப்பான பேட்டிங், என்ன ஒரு இன்னிங்ஸ்!
ஹர்பஜன் சிங்: ஆக்ரோஷமான ஆட்டம்.
ஆர்.ஸ்ரீதர்: ஆண்கள், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆடப்பட்ட மிகப்பெரிய இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.
ரோஹித் சர்மா: காட்டுத்தனமான பவர்.
ஹர்ஷா போக்ளே: இது உண்மையில் கபில்தேவ் டர்ன்பிரிட்ஜ் வெல்ஸ் இன்னிங்ஸுக்கு ஒப்பானது (175 நாட் அவுட் 1983 உலகக்கோப்பை)