பிரித்தானிய வான் பரப்பில் இன்று மாத்திரம் 8800க்கும் மேற்பட்ட விமானங்கள் பறந்துள்ளதாக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானிய வான் பரப்பில் இவ்வாறு அதிகளவான விமானங்கள் பறப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் இது கோடை விடுமுறை காலம் என்பதால் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதுடன் விமான நிலையங்களும் பரபரப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 77,000 விமானங்களை கையாள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் விமானப் போக்குவரத்து வலையமைப்பு தெரிவித்துள்ளது.
இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான விமான போக்குவரத்து என்பதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 வீத அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் பிரித்தானியாவில் மிக அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாகவும், சுமார் 8800க்கும் மேற்பட்ட விமானங்கள் இவ்வாறு பறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து தொடர்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.