கினிகத்ஹேன பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் மாணவியை பாடசாலைக்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் கணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி ஒருவர் அதிகாலையில் பாடசாலைக்கு சென்ற நிலையில் பாடசாலையை திறக்க சாவி பெற்றுக்கொள்ள ஆசிரியையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த பாடசாலையில் சேவையாற்றி வரும் ஆசிரியை ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஆசிரியையின் கணவர், மாணவியிடம் பாடசாலையின் சாவியை கொடுத்துள்ளார். சாவியை பெற்றுக்கொண்ட மாணவி பாடசாலையை திறந்து விட்டு முன்பக்க முற்றத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அப்போது அங்கு சென்ற ஆசிரியையின் கணவன், மாணவியை வகுப்பறை ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன் சம்பவத்தை எவரிடம் கூற வேண்டாம் என்று தெரிவித்து 100 ரூபாவை கொடுத்துள்ளார்.
மாணவி சம்பவம் குறித்து சக மாணவிகளிடம் கூறியுள்ளார். அவர்கள் வகுப்பாசிரியரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.
அவர், அதிபருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.