நல்லெண்ண நோக்கில் இலங்கை வந்துள்ள ஜப்பான் போர் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பார்வையிட்டுள்ளனர்.
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இரண்டு இசுமோ கப்பல்கள் நேற்று முன்தினம் இலங்கை வந்தன.
இந்த நிலையில், குறித்த கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்று பார்வையிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோரும், இலங்கையில் ஜப்பான் தூதர் கெனசி சுகனுமா உட்பட ஜப்பான் பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.
கப்பலை சுற்றிப் பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர், குறித்த கப்பலின் அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.