இரு தாக்குதல் விமானங்கள் மீண்டும் தயார் நிலையில்!

s

கொக்கேய்ன் போதைப் பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 54 கொள்கலன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருள் கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊருகொடவத்த சுங்கப் பிரிவில் காணப்படும் 54 சீனி கொள்கலன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரேஸில் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சீனிக் கொள்கலன்கள் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்கள் தீவிரமாக சோதனையிடப்படாது உரிமையாளர்களிடம் வழங்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அண்மையில் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டது தொடர்பில் கைதான ஏழு பேர் நேரடியாக போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

வேறு நாடு ஒன்றுக்கு மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்தக் கொக்கேய்ன் தொகை இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஊருகொடவத்தையில் சீல் வைக்கப்பட்டுள்ள 54 சீனி கொள்கலன்களும் எதிர்வரும் வாரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.