அரசாங்கத்திலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதி அமைச்சர் டுலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஆளும் கட்சியை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பது குறித்த தெளிவான தீர்மானங்கள் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றேன். நன்றாக சிந்தித்து மிகவும் பொருத்தமான நேரத்தில் நான் தீர்மானம் எடுப்பேன்.
அவசரப்பட்டு நான் தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என டுலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.