லண்டனில் அமைந்துள்ள கனேடிய உயர் ஸ்தானிகர் மாளிகைக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.
கனேடிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையில் மகாராணியின் விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது கனேடிய கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்டனால் மகாராணி எலிசபெத்திற்கு நீல மாணிக்ககல் பதிக்கப்பட்ட ஆடை அலங்கார ஊசி (brooch) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்துடன், அரச சேகரிப்பிலிருந்த கனேடிய கலைப் பொருட்களையும் மகாராணி பார்வையிட்டார்.
பிரித்தானிய குடியிருப்புக்களாக இருந்த நியூபிறவுன்ஸ்விக், நோவஸ்கோஷியா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகியன கடந்த 1967ம் அண்டு கனேடிய கூட்டரசாக உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.