பிதிர்கடன் செய்வதற்கான ஏற்பாடுகள்

d
ஆடி அமாவை விரதத்தை முன்னிட்டு பிதிர்கடன் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை வெள்ளவத்தை ரெயில் நிலையத்திற்கு அமைவாகவுள்ள கடற்கரையில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் எமது நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.