பாடசாலை தோழனுக்கு உணவில் விஷம் வைத்த மாணவன்!

 

p

தன்னுடைய பாடசாலை தோழனுக்கு கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்த குற்றத்திற்காக மாணவனொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் மலேசியாவில் சரவாக் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவன்  இன்று அதிகாலை 2.30 மணியளவில் (மலேசிய நேரப்படி) அவனது வீட்டில் வைத்து கைது செய்ததாக சரவாக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் டத்தோ தேவ் குமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன், பாடசாலைக்கு கொண்டு வந்த உணவில் கரப்பான் பூச்சியைக் கொல்லும் மருந்தைக் கலந்து வகுப்பறைத் தோழனுக்குத் கொடுத்துள்ளான். அதனை உட்கொண்ட அவன் சற்று நேரத்திலேயே உடல் நலம் மோசமடைந்துள்ளது.

இதனிடையே, பாடசாலை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் வழங்கியுள்ளதோடு, அவனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது செயலால் பதட்டமடைந்த குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து தப்பிச்சென்றுவிட்டாக அப்பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மாணவனை கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் டத்தோ தேவ் குமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் 13 வயதுடையதோடு,பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.