அதிர்ஷ்டத்தால் நடிகராகி..! துரதிருஷ்டத்தால் உயிரிழந்த பிரபல கதாநாயகன்..!!

n

சினிமாவில் ஒருவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது அரிது. அதுபோல சிலருக்கு எந்த நேரத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதை கணிக்க முடியாது. சிலர் சினிமாவில் வாய்ப்பு தேடி கடைசி வரை கிடைக்காதவர்களும் உண்டு.

எதிர்பாராத நேரத்தில் சிலருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல சினிமா வாய்ப்பு கிடைப்பதும் உண்டு. அப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தவர்களில் ஒருவர் நடிகர் பாண்டியன். இவர் 1983ல் பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக வளையல் கடை வைத்திருந்தார். அப்போது இயக்குனர் பாரதிராஜாவின் கண்ணில் பட்டு நடிகரானார்.

 

தொடர்ந்து ஆண்பாவம், குருசிஷ்யன், புதுமைப்பெண், கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் நடித்தார். முதலில் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

Ñமஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் சிகிச்சை பலனின்றி கடந்த 2008ம் ஆண்டு உயிரிழந்தார். அதிர்ஷ்டத்தால் நடிகரானவர், துரதிருஷ்டத்தால் உயிரிழந்தார்.