விஜய் அன்டனியுடன் ஜோடி சேர்கிறார் சுனைனா

Sunaina-08-03-Stills-004

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் ‘காளி’ திரைப்படத்தில் விஜய் அன்டனியுடன், நடிகை சுனைனா ஜோடி சேரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ள நிலையில், அதில் ஒருவராக சுனைனா தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக விஜய் அன்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்தை, விஜய் அன்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் அண்டனி பிலிம் கோர்ப் மூலம் தயாரிக்க உள்ளார்.

இந்த வாய்ப்பு குறித்த தெரிவித்த நடிகை சுனைனா, இந்த படத்தில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காதலில் விழுந்தேன்’ படத்திற்கு இசையமைத்த விஜய் அண்டனியுடன் ஜோடி சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.