காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமாலின் நோய் விபரம் வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட சந்திமால், நேற்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்திமாலுக்கு நிமோனியா காய்ச்சல் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சில நாட்கள் சந்திமால் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திமால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் தலைமையில் இலங்கை அணி களமிறங்கி விளையாடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சந்திமால் அணியில் இல்லாததால் இலங்கை அணிக்கு சிக்கல் ஏற்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.