யாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல்

va

கொடிகாமம் – வரணி பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம்.குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், வாள்வெட்டிற்கு உள்ளான இராணுவத்தினர் கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் வரணி பகுதியிலுள்ள முல்லி என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குடத்தனைப் பகுதியில் நேற்றைய தினம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடலோரக் காவற்படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய தினம் வரணியில் இராணுவத்தினர் மீதான வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.