‘நாச்சியார்’ திரைப்படத்தின் ஞாபகங்கள் எப்போதும் நினைவில் நிலைக்கும்-ஜி.வி.பிரகாஷ்

nachiyaar_3138585f

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பின் ஞாபகங்கள் எப்போதும் நினைவில் நிலைக்கும் என்று தெரிவித்த அவர், இயக்குநர் பாலாவிற்கும் ஜோதிகாவிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திருமணத்துக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தெரிவுசெய்து நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.