பிரித்தானியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்களின் அளவு குறையவில்லை

p

சிரியா மற்றும் ஈராக்கில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் விரட்டியடிக்கப்பட்டுள்ள போதிலும் பிரித்தானியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்களின் அளவு குறையவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட விரிவுரை நிகழ்ச்சியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், இவ்வருடம் மார்ச் மாதம் முதல் ஆறு பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. சிரியா மற்றும் ஈராக் விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும் பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன” என தெரிவித்தார்.

p1