கனடாவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

கனடாவில் இணய வழியிலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு அதிக அளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னர் நாட்டில் அதிக அளவான இணைய வழி சிறுவர் துஷ்பியோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளைகள் அதிக நேரத்தை இணயத்தில் செலவிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இணைய வழியிலான சிறுவர் துப்பியோக குற்ற செயல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

தற்காலத்தில் மிக சிறு வயதில் இருந்தே இணயம் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்களும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் படமாகப் போகும் ‘டிமான்டி காலனி 3’

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க ‘டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2’ ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம் அஜய் ஞானமுத்து.

அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு பாகங்களின் கதைக்களமும் சென்னையில் இருந்தது. ஆனால், மூன்றாவது பாகத்திற்கான கதைக்களத்தை வெளிநாட்டில் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.

அதற்கான இடங்களைத் தேர்வு செய்ய ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுகளுக்கு அஜய் ஞானமுத்து சென்றுள்ளதாகத் தகவல். 2025ம் ஆண்டிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து அதே வருடத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் கோல்டுமைன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

10ம் தேதி வெளியாக இருக்கும் வணங்கான்

பாலா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வணங்கான்’. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தற்போது ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று வெளியீட்டு நாளை அறிவித்துள்ளார்கள்.

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம், ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. அதனால், ‘வணங்கான்’ படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், படத்தைத் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார்கள். ‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படமும் பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.

மதம் மாறியது குறித்து ரெஜினா விளக்கம்

தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. அதன் பிறகு ‘சரவணன் இருக்க பயமேன், ராஜதந்திரம், மாநகரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், விஷாலின் ‘சக்ரா’ படத்தில் வில்லியாக நடித்தார்.

தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரெஜினா அளித்துள்ள ஒரு பேட்டியில், ”என்னுடைய அப்பா முஸ்லிம், அம்மா கிறிஸ்டியன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன் காரணமாக முஸ்லிம் பெண்ணாகவே வளர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால், என் தாயாரின் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறேன். சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டேன். அதன்பிறகுதான் ரெஜினா என்ற எனது பெயருடன் கசெண்ட்ரா என்பதை இணைத்துக் கொண்டேன்” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ரெஜினா.

இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்!

தற்போது நடைபெற்ற சரிகமபவின் விஜயகாந்த் சுற்றில் ஒரு போட்டியாளர் வருத்தத்துடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சரிகமப
சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் பாடல் பாடி அசத்தி வரும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தீவிரமாக இருந்தது.

நடிகர் கேப்டனின் நினைவு நாள் என்பதால் இந்த வார சுற்று கேப்டன் விஜயகாந்த் சுற்றாக நடாத்தப்பட்டது. இந்த சுற்றில் கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்பட பாடல்கள் இடம்பெறும்.

இதற்கு சிறப்பு விருந்தினர்களாக நளினி மற்றும் விஜயகாந்தின் மகனான சண்முகப்பாண்டியன் கலந்துகொண்டுள்ளனர். இதில் அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடக்கூடியவர்கள்.

போட்டியாளர்கள் அனைவரும் இந்த சுற்றில் சிறப்பாக பாடல் பாடி அசத்தியிருந்நத நிலையில் எலிமினேஷனும் நடைபெற்றது. இதில் வாக்குகள் குறைவாக பெற்ற மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களின் படி தர்ஷினி ஜீவாம்பிரிகா கர்சிக்கா போன்றோர் வாக்குகளின் படி ஆபத்தான நிலையை எட்டி இருந்தனர். அந்த வகையில் கர்சிக்கா மற்றும் தர்சினி சேவ் செய்யப்பட்டனெர். ஜீவாம்பிரிகா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பல நோய்க்கு மருந்தாகும் ராகி!

ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.

ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

இதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள், முக்கிய நுண்ணூட்டச்சத்துக்கள் – வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் – அனைத்து அத்தியாவசிய மேக்ரோனூட்ரியன்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

ஆனால் இதை குறிப்பிட்ட சிலர் சாப்பிட கூடாது அப்படி சாப்பிடால் அவர்களுக்கு பக்க விளவை உண்டாக்கும். அது பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கேழ்வரகில் நார்ச்சத்து அதிகதாக காணப்படுகின்றது. பொதுவாக நாம் சாப்பிடும் அரிசியை விட இந்த ராகியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் இரும்பு சத்து குறைபாடு அதிகதாக இருப்பவர்கள் ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் ராகியை எடுத்துக் கொண்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

இதில் அதிகளவு நார்ச்சதது இருப்பதால் நீண்ட நேரத்திற்கு பச்சி உணர்வை நிறுத்தி வைக்கும். இதனால் அதிகதாக சாப்பிடுவதை தடுத்து உடல் எடையை கட்டுப்படுத்தும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ராகியை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

கேழ்வரகை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பொதுவாக சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் கேழ்வரகை சாப்பிடக்கூடாது. மீறி இதை சாப்பிடும் போது சிறுநீரக பிரச்சனை அதிகரிகக்கும்.

இதற்கு காரணம் இதில் காணப்படும் அதிகளவான கால்சியம் தான். தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு கேழ்வரகு நல்லதல்ல.

கேழ்வரகை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீன் வறுவலுக்கு ஏற்ற பொடி

வறுக்கும் போது அதன் சுவை மாறாமல் இன்னும் சுவையாக வறுக்க வேண்டும். மீனில் வைட்டமின்களும் கொழுப்பு புரதம் போன்ற சத்துக்கள் இருக்கின்றது.

இதை பல வகை மசாலா கொண்டு வறுக்கலாம். ஆனால் இன்றைய பதிவில் கொடுக்கப்பட்ட மசாலா செய்முறை மீனின் சுவையையும் வாசனையும் அதிகரிக்கிறது. இந்த பதிவில் அது பற்றிய முழு விபரத்தையும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வர மிளகாய் – 10
வரமல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், வர மிளகாய், வரமல்லி, சீரகம், மிளகு, வெந்தயம் என அனைத்தையும் தனித்தனியான வறுக்கவேண்டும்.

ஒன்றாக அனைத்தையும் சேர்த்து வறுக்கக்கூடாது. தனித்தனியாகத்தான் வறுக்கவேண்டும். ஒன்றாக வறுத்தால் அனைத்தும் சரியான அளவில் வறுபடாது.

அனைத்தையும் தனித்தனியாக நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்தையும் ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும்.

அது ஆறியவுடன், அதை ஒரு ஏர் டைட் டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். மீன் மசாலாப்பொடி தயார். நீங்கள் இதை எந்த மீன் வறுவலுக்கும் பயன்படுத்தலாம்.

காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை இவர் தானாம்!

ராகவா லாரன்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன்பின் அனைவருக்கும் நினவுக்கு வரும் ஒரே விஷயம், காஞ்சனா படம் தான்.

முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதனால் காஞ்சனா 4 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இடம் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்-ல் இருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதே போல் இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி என பின் தெரியவந்தது.

லேட்டஸ்ட் அப்டேட்

இந்த நிலையில், காஞ்சனா 4 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே தான் பேயாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த தகவல் உண்மையா அல்லது இதுவும் வதந்தி தானா என்று. பூஜா ஹெக்டே கைவசம் தற்போது தளபதி 69, ரெட்ரோ ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பும் மார்கோ

மலையாள திரையுலகில் இருந்து பல யர்த்தார்த்தமான திரைப்படங்களை 2024ல் பார்த்து வந்தோம். ஆனால், முழுமையான கமர்ஷியல் அம்சத்தில், ரத்தம் தெறிக்க தெறிக்க உருவான ஒரு திரைப்படம் தான் மார்கோ.

பிரபல நடிகர் உன்னி முகுந்தன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஹனீப் அடேனி என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

வசூல்
இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி வெளிவந்த மார்கோ திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 10 நாட்களில் இப்படம் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மருந்தகங்கள் மூடப்படும் நிலையில்

நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது (NMRA) மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சரைத் தொடர்பு கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் இதனால் ஜனவரியில் நிலைமை மோசமடையும் என்றும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்த்தின் தலைவர் சண்டிக கங்கந்த (Chandika Kanganda) தெரிவிக்கையில், “தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மற்றும் தொடர்புடையவர்களை நாங்கள் கோரி வருகிறோம், ஆனால் எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

குறித்த முடிவினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாடளாவிய ரீதியில் செயற்படும் மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றார்கள். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவது அப்பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளது, ஏனெனில் அம்மக்கள் மருந்துகளைப் பெற கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆகவே இந்த வியடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும் ஆபத்துள்ளது. மருந்தாளரின் பதிவு முறையை அகற்றுவதல்ல எமது கோரிக்கை தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே எமது கோரிக்கையாகும்.

6,700 மருந்தாளர்கள்
நாடு முழுவதும் தற்போது செயற்பாட்டில் உள்ள 5,100 மருந்தகங்களில், தகுதிவாய்ந்த மருந்தளர்கள் பற்றாக்குறையால் பல மருந்தகங்கள் மூடப்படும் நிலைமையில் உள்ளன.

அத்தோடு தகுதிவாய்ந்த நபர்கள் வெளியேறுவதால் நாட்டில் மருந்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, இலங்கை மருத்துவ கவுன்சிலின் மீளாய்வுக்கு அமைவாக 6,700 மருந்தாளர்கள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளனர்.

சுறா தாக்கியதில் சுற்றுலா பயணி பலி!

எகிப்து கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆழ்கடல் பகுதிக்குள் நீச்சலுக்காக சென்றபோது, சுறா தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளில் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததில் அவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலிகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அவர் எந்த நாட்டை சேர்ந்த நபர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

அந்த பகுதிக்கு செல்ல திங்கட்கிழமை முதல் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடை முறை!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள்!

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் வருடாந்த பாடசாலை வருகை 210 நாட்கள் என்ற தேவை 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாட்கள் இருப்பதன் காரணமாக பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை
2024 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு ஜனவரி 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் மூன்று வாரங்கள் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் ஜனவரி 27 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு
மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான 26 பொது விடுமுறை நாட்களில், வார இறுதி நாட்களில் 04 விடுமுறைகள் மட்டுமே உள்ளன, ஏனைய அனைத்து பொது விடுமுறைகளும் வார நாட்களில் உள்ளன.

அதற்கமைய, 210 நாட்களுக்கு பாடசாலை செயற்பாடுகளை நடத்த முடியாது என தெரிவித்த கல்வி அமைச்சு, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்களை 181 நாட்களாக மட்டுப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இளநரையை அடியோடு விரட்ட அருமையான டிப்ஸ்

தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இளநரை என்பது ஒரு பிரச்சனையாகவெ உள்ளது. இந்த இளநரை வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக ‘மெலனின்’ எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது.

இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன.

இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன. இதனால் தான் இளநரை வரக்காரணமாகும். இதை எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

இளம் நரை முடிக்கு தைலம் செய்ய
வெள்ளைக் கரிசாலைச் சாறு 100 மி.லி

கறிவேப்பிலைச் சாறு 100 மி.லி

நெல்லிக்காய் சாறு 100 மி.லி

நீல அவுரி சாறு 100 மி.லி

நாட்டு செம்பருத்திப்பூ 25

கருஞ்சீரகம் 10 கிராம்

கார்போகரிசி 10 கிராம்

அரைக்கீரை விதை 10 கிராம்

தேங்காய் எண்ணெய் 1 லிட்டர்

செய்யும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள சாறுகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு செம்பருத்தி பூ மற்றும் பொடி செய்த மற்றவற்றையும் சேர்த்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி எடுக்க வேண்டும்.

இந்தத் தைலத்தை தலைமுடியில் தேய்த்துக் குளித்துவந்தால் இளம்நரை நீங்கும்.

இது தவிர நாளாந்த உணவில் முட்டையின் வெள்ளை கரு, வேகவைத்த சிவப்புக் கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பச்சை பட்டாணி, சோயா, மொச்சை, உளுந்து போன்றவற்றை சேர்ப்பது அவசியம்.

தினமும் கீரைகள் எடுத்துக்கொள்வது அவசியம். அவற்றில் அரைக் கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பொன்றவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

இளநரை இருப்பவர்கள் இந்த செய்முறைகளை மறக்காமல் செய்யும் போது இளநரை அடியோடு இல்லாமல் போகும்.

தலைக்கு குளிக்கும் பொது செய்யக் கூடாத தவறுகள்!

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள்.

ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த பழக்கம் நாளடைவில் மாறி, தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் போயுள்ளது.

தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும்.

குளிக்கும் போது நேரடியாக ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில், குளிக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

குளிக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய விடயங்கள்

1. தலைக்கு ஷாம்பு போட்டு தேய்க்கும் மென்மையாக கையாள வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சீக்கிரம் குளிக்க வேண்டும் என்று அவசரமாக தேய்ப்பார்கள். இது முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

2. பெரும்பாலானவர்களுக்கு தலைக்கு குளிக்கும் போது அதிக முறை ஷாம்பு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதிகமான அழுக்குகள் தலையில் இருக்கும் பொழுது ஷாம்பு கொஞ்சம் அதிகம் பயன்படுத்தலாம். ஆனால் ஷாம்பு பயன்படுத்துவதால் தலைமுடி பாதிக்கப்படுவதுடன், வறட்சியும் ஏற்படும்.

3. இந்தியாவில் அதிகமான மக்கள் ஷாம்பு பயன்படுத்திய பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை. தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கண்டிஷனர். ஷாம்புவிற்கு பின் கண்டிஷனர் பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகின்றது.

4. சூடான நீரில் குளிப்பதை ஒரு சிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த பழக்கத்தினால் நாளடைவில் அவர்களின் தலைமுடியை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் தலையில் பொடுகு, மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சடலமாக மீட்க்கப்பட்ட சுந்தரி சீரியல் நடிகர்!

சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் திலீப் ஷங்கர் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவர், கடைசியாக தமிழில் ஹிட்டான சுந்தரி சீரியலில் மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திலீப் ஷங்கர், தற்போது ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் அறையில் மரணம்
இந்த நிலையில், நடிகர் திலீப் ஷங்கர் தற்போது Panchagni என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் இருந்து இரண்டு நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான்கு நாட்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார். அந்த இரண்டு நாட்கள் வெளியில் வராத திலீப் ஷங்கரை காண ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது அவர் பிணமாக கிடந்துள்ளார்.

உடனே தகவல் அறிந்து வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து இவரின் இறப்பிற்கு என்ன காரணம்? அவரின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் சதி திட்டம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹார்மோன் சமநிலையின்மையினால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!

ஆண்களை விட பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம்.

இவற்றை முன்கூட்டியே கண்டறிவதால் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுக்குள் வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை

1. பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மனச்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்று விடும். இன்னும் சிலருக்கு மாதவிடாய் காலம் முடிந்தும் ரத்த போக்கு இருக்கும்.

3. ஹார்மோன் சமநிலையின்மையால் அவஸ்தை அனுபவிக்கும் ஒருவர், திருமணத்திற்கு பின்னர் அதிகமாக பாதிக்கப்படுவார். உதாரணமாக கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

4. முப்பது வயது கடந்தவர்கள் உடல் பருமன் அதிகரிப்பினால் அவஸ்தைப்படுவார்கள். இதனை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும்.

5. ஹார்மோன் குறைபாடு உள்ள பெண்கள் தைராய்டு நோயால் பாதிக்கப்படுவார்கள். இது ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism) என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது. இதனை பெண்கள் ஆரம்ப காலங்களில் கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க வேண்டும்.

6. ஹார்மோன் குறைபாடு என்பது பரம்பரை நோயல்ல. இருந்தாலும் தைராய்டு போன்ற சில நோய்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அது மற்றவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 30.12.2024

மேஷம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகள் இணைத்துப்பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். விழிப்புடண் செயல்பட வேண்டியநாள்.

மிதுனம்

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

மீனம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் உயரும் நாள்.

திருக்குறள் இசையை முடித்தார் இளையராஜா

சென்னை: காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்துக்கான இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இளையராஜாவை சந்தித்த இப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘முல்லைப் பூவின் வாசம் பாடலுக்கு இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி அந்த பாடலை எனக்கு இளையராஜா சார் காண்பித்தார். அது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்தப் பாடல் நிச்சயம் 2025 ஆம் வருடத்தின் சிறந்த பாடலாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி நடித்துள்ளனர்.

சமையல் பாத்திரங்களும் அவற்றின் ஆரோக்கியமும்!

அந்தக் காலத்தில், நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கு மண் பாண்டங்களையும், இரும்பாலான பாத்திரங்களையுமே பிரதானமாக பயன்படுத்தினார்கள். அதன்பின் செம்பு, பித்தளை பாத்திரங்களையும் சமைக்க பயன்படுத்தினார்கள். அவையெல்லாம் காலப்போக்கில் மாறி தண்டவாளம், எவர்சில்வர், அலுமினியம் பயன்பாடுகள் புழக்கத்துக்கு வந்தது.

அதன் பிறகு எண்ணெய் ஒட்டாமல் இருக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள் வந்தது. தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு அடுத்தக்கட்டமாக செராமிக் (பீங்கான்) பாத்திரங்கள், டெஃப்லான் பாத்திரங்கள், மைக்ரோவேவ், ஏர் ஃப்ரையர் போன்றவை வந்துவிட்டது. இதில் என்ன மாதிரியான பாத்திரத்தில் சமைத்தால் என்ன மாதிரியான நன்மைகள் தீமைகள் நமக்கு கிடைக்கிறது என்று பார்க்கலாம்:

மண் பாண்டம்

மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

பித்தளை

கடந்த காலங்களில் மக்கள் பெரும்பாலும் பித்தளை பாத்திரங்களில் உணவு சமைத்ததை நாம் பார்த்திருப்போம். பித்தளை பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் காக்கப்பட்டது. ஆனால், அதில் அதிக உப்பு அல்லது புளிப்பு சார்ந்த பொருட்களை சமைப்பது உணவில் விஷத்தை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. எனவே, நாளடைவில் பித்தளை பயன்பாடு குறைந்துவிட்டது.

தாமிரம்

தாமிரம் இரும்பை விட ஐந்து மடங்கு சிறந்தது மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைவிட இருபது மடங்கு சிறந்தது என்று பரவலாக அறியப்படுகிறது. சிறந்த வெப்ப கடத்துத்திறன் பண்புகள் இதில் உள்ளது. வெப்பநிலையை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்பதால் இது தீ பிடிக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. இதன் விளைவாக குறைந்த ஆற்றலுடன் சமைக்க முடியும். தாமிரப் பாத்திரங்கள் நன்றாக வெப்பமடைவதால், செப்புப் பானைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.

இரும்பு

இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இப்போது அரிதாகவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த உலோகப் பானையில் தயாரிக்கப்படும் உணவு ஒவ்வொரு வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இந்தப் பாத்திரங்களில் சமைப்பது தானாகவே உணவில் உள்ள இரும்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உணவு அதன் முழு ஊட்டச்சத்தையும் பெறுகிறது. பொதுவாக. ஒவ்வொரு மனிதனுக்கும் இரும்பு சத்து தேவை. குறிப்பாக பெண்களின் உடலில் இரும்புச்சத்துக்கு நல்ல பங்கு உண்டு.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களும் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கார்பன், குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவற்றை இரும்பில் கலப்பதன் மூலம் உருவாகும் கலப்பு உலோகமே ஸ்டீலாகும். இதில் சமைப்பதில் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் இல்லை. இந்த பாத்திரங்களின் வெப்பநிலை மிக விரைவாக உயர்கிறது.

அலுமினிய பாத்திரங்கள்

அலுமினிய பாத்திரங்கள் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், அலுமினியத்தில் உள்ள மூலக்கூறுகள் வெப்பத்தைப் பெற்றவுடன் விரைவில் செயல்படுத்தப்படுகின்றன. அதனால்தான் பெரும்பாலான உணவுகள் அலுமினிய பாத்திரங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இது மிக விரைவில் அமிலத்துடன் ரசாயன எதிர்வினைகளைக் காட்டத் தொடங்குகிறது. எனவே, அதில் புளிப்பு அல்லது அசிடிக் காய்கறிகளை பயன்படுத்தக் கூடாது.

நான் ஸ்டிக்

நான் ஸ்டிக் என்றால் எதையும் ஒட்டாத ஒரு பாத்திரம். அத்தகைய பாத்திரங்களில் சமைக்க அதிக நெய் அல்லது எண்ணெய் தேவையில்லை. ஆனால், உணவைத் தயாரிக்கும்போது இந்தப் பாத்திரங்களில் அதிக கீறல்கள் இருந்தால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

செராமிக்

பீங்கான் பாத்திரங்கள் உலோகங்கள் அல்லது நச்சு ரசாயனங்கள் ஆகியவை இன்றி, பாதுகாப்பான சுகாதாரமான கனிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால், இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மேலும், பீங்கான் சமையல் பாத்திரங்கள் மெதுவாக வெப்பமடைகின்றன, ஆனால் வெப்பத்தை நன்கு தக்கவைத்துக் கொள்ளும் தன்மையுடையது. இதனால், உணவுகளை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கின்றது.

டெஃப்லான்

டெஃப்லான் பூச்சு கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை (pan) 170 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கினால் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஸ்டவ் மீது நீண்ட நேரம் காலியாக வைத்து சூடாக்கினாலும் ஆபத்தான விளைவு ஏற்படுத்தும். காலியாக வைத்து சூடுபடுத்தும் போது, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் டெஃப்லான் லேயர், நச்சுப் புகைகளை உருவாக்கும். இந்த சமையல் பாத்திரங்களில் நான்ஸ்டிக் பூச்சு சேதமடைந்து விட்டால், அதைப் பயன்படுத்தக் கூடாது.

மைக்ரோவேவ்

மைக்ரோவேவ் அவனில் மிகக் குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிக நேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். இருந்தாலும், மைக்ரோவேவில் உணவை நீண்ட நேரம் சூடாக்கினால், அதில் ‘ அக்ரிலாமைடு’ (acrylamide) என்ற வேதிப்பொருள் உருவாகும்.

இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே, நீண்ட நேர சமையலை தவிர்க்க வேண்டும். மைக்ரோவேவில் சமைக்கும் போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பாலிமர் (polymer) துகள்களை உடைக்கும். இந்த பாலிமர் துகள்கள் உணவுடன் கலக்கின்றன. இதன் காரணமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் தோன்றும். இது ஆஸ்துமா அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

ஏர் – ஃப்ரையர்

மைக்ரோவேவ் அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் ஃப்ரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன, அத்தகைய உணவுகளை ஏர் ஃப்ரையரில் சமைக்கும் போது இதில் எண்ணெய் சத்து மிக மிகக் குறைவாக இருப்பதால் அதிக அளவிலான கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், சரியான கால அளவில் சமைக்காமல் நீண்ட நேரம் சமைத்தால், அக்ரிலாமைடு’ (acrylamide) என்ற வேதிப்பொருள் வெளியாகி உணவை ஆபத்தானதாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு.