இன்று முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்வு..!

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணைய டேட்டா பக்கஜ்களுக்கான கட்டணங்ளுக்காக அறவீடு செய்யப்பட்டு வந்த 10 வீத தொலைதொடர்பு வரி தற்போது 17 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வற் வரிச் சட்டத்தின் அடிப்படையில் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொலைபேசி கட்டணங்களுக்காக 27 வீத வரியே அறவீடு செய்யபட்டு வந்தது. எனினும் தற்போது வற் வரி அதிகரிப்பினால் மொத்த வரி சுமார் 50 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் நுகர்வோருக்கும் நியாயமான ஒர் தீர்வு வழங்கும் வகையில் கட்டணங்களில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் யோசனை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு சம்மந்தமாக இலங்கையின் முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும் 011 532 9501க்கு தெரிவிக்கலாம்.

மேலும் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்கள் இது சம்மந்தமாக அந்தந்த பொலிசாரிடமும் புகார் செய்யலாம் . மேலும் காணாமல் போன கடவுசீட்டு மீண்டும் கிடைத்தால் அதை உபயோகபடுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரிடம் இது குறித்து கொடுத்த அறிக்கையின் நகலை இலங்கை தூதரகத்தில் கொடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அதை பற்றி தகவல் கிடைத்தவுடன் இலங்கையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அவர்கள் தகவல் தருவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வேறு நபரின் கடவுச்சீட்டு நம் கையில் கிடைத்தால் உடனே குடிவரவு திணைக்களத்துக்கு நாம் அதை பற்றி தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி இப்போது யாரின் பிடியில்….? என் குடும்பமே எனக்கு எதிரிகள்..! கலைஞர் கண்ணீர்..!!

கலைஞர்…!? இப்போது படுத்த படுக்கையில். தளபதியோ கடமையே கண்ணாக கட்சிப் பணி. அதுவும் ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் கட்சிப் பணி.

இவ்வளவு நோயிலும் கலைஞர் தளபதிக்கு பொறுப்பை வழங்காமல் இழுத்தடிக்கிறார் என்பதற்கு மொத்தமாக கலைஞரை மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்.

ஆனால் உள்ளூர பார்த்தால் அத்தனை உள்ளடி வேலைகளுக்கும் காரணம் கனிமொழி தான் என்கிறது அந்த புலனாய்வு வார இதழ். அவரை இயக்குவது தென் மண்டல அண்ணாச்சி என்கிறார்கள் ..!

பண உதவிகள், படைபலம் அரசியல் சப்போர்ட் அனைத்தும் அந்த அண்ணாச்சிதான் செய்கிறார்.

இது தெரிந்த கலைஞர் பேராசிரியர் அன்பழகனிடம் புலம்பி கண்ணீர் வடித்துள்ளார். தளபதியின் நிலையில் யார் இருந்தாலும் இந்நேரம் கட்சியை கைப்பற்றி இருப்பார்கள்.

ஆனால் தளபதி பொறுமை காக்கிறார். என்னால் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை..என் குடும்பமே  எனக்கு எதிரி என்றாராம்..! பேராசிரியர் அன்பழகனால் அவரைத் தேற்ற முடியவில்லை..!

வடக்கில் இடம்பெற்ற போராட்டங்கள் நியாயமானவை: யாழ். வந்த ஜனாதிபதி மைத்திரி ஏற்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்.மக்கள் மிக அமைதியாக இருந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். மக்கள் மிக நிதானமாக நடந்து கொண்டதாகவும்இ இதேபோன்ற சம்பவம் தெற்கில் நடைபெற்றிருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கீரிமலை பகுதியில் வலி.வடக்கில் வீடற்ற மக்களுக்காக அமைக்கப்பட்ட 100 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் இன்றைய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் உடனடியாகவே பொலிஸ்மா அதிபரையும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் கேட்டிருந்தேன்.

அதன் பின்னர் உடனடியாகவே விசேட விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணம் அனுப்பி அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் எதிர்காலத்திலும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என நம்புகிறேன்.

இதேபோல் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் இங்கே சில ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.

அவை புதுமையான விடயங்கள் அல்ல. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதன் பின்னர் என்ன மனோ நிலையில் இருந்திருப்பார்கள்.

அவர்களுடைய மனோநிலை என்ன? என்பதை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மாணவர்களுடைய போராட்டங்கள்இ ஆர்ப்பாட்டங்கள் நியாயமானவை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

அதேபோல் இவ்வாறான சம்பவம் ஒன்று தெற்கில் நடைபெற்றிருந்தால் அதன் பின்னான நிலைமை மிக மோசமாகியிருக்கும். ஆனால் யாழ்.மக்கள் மிக பொறுமையாக நடந்து கொண்டார்கள்.

அதற்காக அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேபோல் இவ்வாறான விடயங்களில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஊடகங்க ள் சரியான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

மக்கள் மத்தயில் அமைதியை உருவாக்குவதையே ஊடகங்கள் தங்கள் கடமையாக கொண்டிருக்க வேண்டும்.

மாறாக மக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்குவதாக இருக்க கூடாது. ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீ்டுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய ராசி பலன் 01-11-2016 | Raasi Palan

  • மேஷம்

    மேஷம்: காலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஇறுக் கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக் கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • துலாம்

    துலாம்: காலை 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: காலை 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார் கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவுக் கிட்டும். தடைகள் உடைபடும் நாள்.