கனடாவின் ஒஷாவா பகுதியில் விபத்து ஒருவர் பலி!

கனடாவின் ஒஷாவா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஒஷாவாவின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அனுரவுடன் கூட்டணி அமைக்க பேச்சவார்த்தை!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சி முக்கியஸ்தர்களுடன் மலையகத்திலுள்ள பிரதான கட்சியின் பிரமுகர்கள் பேச்சு நடத்திவருகின்றனர்.

கொழும்பில் முகாமிட்டுள்ள மேற்படி கட்சி உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியினருடன் நேரடி பேச்சில் ஈடுபட்டு, அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர் என தெரியவருகின்றது.

ஒன்றரை இலட்சம் வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகள்

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் சுமார் ஒன்றரை லட்சம் அளவில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் சில உள்ளடக்கங்களை நீக்குமாறு, தேர்தல் ஆணையகம் விடுத்த கோரிக்கையை சமூக ஊடக தளங்கள் நிராகரித்துள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறிய 201 இடுகைகளை நீக்க, தேர்தல் ஆணையகம் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் Meta, YouTube, TikTok மற்றும் Google ஆகியவை அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டன.

சுமார் 937 கேள்விக்குரிய இடுகைகள் தேர்தலுக்கு முன்னர், குறித்த தளங்களில் இடுகையிடப்பட்டிருந்தன

எனினும், தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறி 872 பதிவுகள் சர்வதேச சமூக ஊடக நிறுவனங்களால் நீக்கப்பட்டன.

முதலாம் இணைப்பு
அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி தேர்தலில் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போதுமானதாக இல்லாவிட்டாலும் இறுதி முடிவாக இவ்வாறானவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாரபட்சம் விளைவிக்கும் சட்டவிரோத விளம்பர திட்டங்களை நீக்குமாறு Meta, YouTube, Tiktok மற்றும் Google போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் சுமார் ஆயிரம் சமூக ஊடக பதிவுகளில் தேர்தல் விதிமுறைகளை மீறப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடகி கெனிஷாவுடன் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம்ரவி!

நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் தன்னை சேர்த்து வதந்தி பரப்புவதற்கு ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் இந்த முடிவில் தனக்கு விருப்பம் இல்லாதது போன்று மனைவி ஆர்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் நேரத்தை கழித்து வருவதை அவதானித்த நெட்டிசன்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதாக வதந்தியை கிளப்பி வந்தனர். இதற்கு ஜெயம் ரவி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஜெயம் ரவி நடித்துள்ள ப்ரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜெயம் ரவி கூறுகையில், “இந்த விஷயத்தில் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு… வாழ விடு. யாரையும் இதில் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயர்களை சொல்கிறார்கள். அப்படி செய்யாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள்.

பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர். எதிர்காலத்தில் நானும், கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் தொடங்கி பலருக்கும் உதவ வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் என்னையும், கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

ரசிகையுடன் வீடியோ கோலில் பேசிய அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

வீடியோ காலில் பேசிய அஜித்
சமீபத்தில் நடிகர் அஜித் தனது ரோல் மாடல் அயர்டன் சென்னாவின் புகைப்படத்துடன் எடுத்த செல்பி படுவைரலானது. அதுமட்டுமின்றி புதிதாக வாங்கிய காரில் அஜித் செல்லும் வீடியோக்களும் வைரலாகி வந்தது.

இந்த நிலையில், நடிகர் அஜித் தனது ரசிகை ஒருவருடன் வீடியோ காலில் பேசும் வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காலில் அஜித்தின் சிறப்பு ரசிகர்கள் அனைவரும் கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ..

இரண்டாம் வாக்கெடுப்பு ஆரம்பம்!

யாரும் 50 வீதம் பெறவில்லை 3.75000 வாக்குகள் வித்தியாசம் உள்ளதனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெறாததனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 3. 75 000 மேலதிக வாக்கில் அனுர முன்னிலையிலும் சஜித் இரண்டாம் இடத்திலும் உள்ளார். இவர்கள் இருவர் தவிர்ந்த 21 இலட்சம் வாக்குகள் இரண்டாம் வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிப்பதை ஊக்குவிக்க புதிய திட்டம்!

வாக்களிப்பது இலங்கையர்களின் அடிப்படை உரிமையாக இருந்தாலும், வாக்காளர்களின் அக்கறையின்மை, தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ கடமைகள், அடையாள ஆவணங்கள் இல்லாமை அல்லது வாக்காளராகப் பதிவு செய்யத் தவறியமை போன்ற காரணங்களால் பலர் நேற்றைய தினம் வாக்களிக்கவில்லை.

இலங்கையில் சராசரியாக, சுமார் 20 முதல் 25 சதவீத வாக்காளர்கள் தேர்தல் செயல்பாட்டில் உள்ள ஆர்வமின்மையால் தேர்தலில் வாக்களிக்கத் தவறி விடுகிறார்கள்.

வாக்களிப்பதில் தவறியவர்களில், தேர்தல் நாளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் பணிபுரியும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பணிக் கடமைகள் காரணமாக வீடு திரும்ப முடியாதவர்கள் என்பவர்கள் அடங்குகின்றனர்.

வாக்களிக்க வேண்டிய கட்டாயமான சரியான அடையாள ஆவணம் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போனவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

இதன்படி, நேற்றைய தேர்தலில் சுமார் 40 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்று மதிப்பி;டப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போன்று இலங்கையின் தேர்தல் சட்டங்கள் பரவலான மேம்பட்ட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

எனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக தேர்தல் ஆணையகம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பன நிபுணர்களுடன் இணைந்து மேம்பட்ட வாக்களிப்பு முறையின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.

பதவியேற்க தயார் நிலையில் அனுர

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான திட்டங்கள் தயார்நிலையில் உள்ளதாக அவரது கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுரகுமார திசநாயக்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என கட்சி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலு கூறுகையில், ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் பதவியேற்பிற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தனது கட்சிக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர், தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்த பின்னரே இது குறித்து தீர்மானிப்போம் என தெரிவித்துள்ள அவர், தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் விதம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்கின்றது என தெரிவித்துள்ள பிமல்ரத்நாயக்க,, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பொதுமக்கள் கரிசனை கொள்ளவேண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.

மஹிந்தவின் கோட்டையை தகர்த்த அநுர

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி தென் மாகாணம், ஹம்பாந்தோட்டை முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,

அனுரகுமார திஸாநாயக்க – 221,913

சஜித் பிரேமதாச – 131,503

ரணில் விக்ரமசிங்க – 33,217

நாமல் ராஜபக்ஷ – 26,707

அதேவேளை ஹம்பாந்தோட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் கோட்டை என கடந்த காலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ மிகவும் குறைந்த்தளவு வாக்குகளையே அங்கு பெற்றுள்ளார்.

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி நேற்று இரவு 10 மணி முதல் காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சர்களை காப்பாற்றியமைக்கு ரணிலுக்கு தண்டனை!

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படுதோல்வி அடைந்துள்ளார்.

அரசியல் சாணக்கியம், மேற்குலக நாடுகளுடன் நெருக்கமான உறவு, பொருளாதார நிபுணத்துவம் போன்ற பன்முக ஆற்றல்களை கொண்ட ரணில் விக்ரமசிங்க, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளராக அரசியல் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

ராஜபக்சர்களை காப்பாற்றியமைக்கு தண்டனை
இதுவரை மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க மற்றுமொரு தடவை தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த கோட்டபாய அரசாங்கத்தினை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட போதும், ஜனாதிபதி பதவி மூலம் அவர்களை பாதுகாத்தமையே மக்கள் அவரை தோற்றடித்தமைக்கான பிரதான காரணமாகும்.

ராஜபக்சர்களை காப்பாற்றியமைக்கு எதிராகவே தாம் தேசிய மக்கள் சக்தி வாக்களித்ததாக தென்னிலங்கை மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் ஆளுமையுள்ள ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களை காப்பாற்றி, தொடர்ந்தும் ஆட்சியில் செயற்பட வைத்தமை மக்களை கடும் அதிருப்பதி அடைய செய்திருந்தது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள், ஊழல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை தன்வசம் வைத்திருந்தமை ரணிலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயற்பாடே தேசிய மக்கள் சக்தி கட்சியும் மக்கள் மத்தியில் எழுச்சி பெற பிரதான காரணமாக அமைந்திருந்தது. இவ்வாறான ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில், ரணிலுக்கு நாட்டு மக்கள் தண்டனை கொடுத்து பதவியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய சுமார் 20 வீதமான வாக்குகளை மட்டுமே ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார். இதனையடுத்து தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக ரணில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் ஊரடங்கை மீறிய மக்களுக்கு எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) நண்பகல் வரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய அனுமதியின்றி வெளியில் நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன்கள் 22.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அம்பிகையை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப் பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப் பெறலாம்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்த முக்கியமான காரியம் ஒன்று அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டா கும். விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் வீட்டில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று துர்கையை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி அவர்களை உற்சாகப் படுத்துவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக் கையாளர்கள் அறிமுகமாவார்கள். மகாலட்சுமி வழிபாடு நன்று.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண் பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்க ளால் செலவுகளும் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் தேவை யற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. மாலையில் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவு தருவார். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.

கும்பராசி அன்பர்களே!

தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்க டங்கள் ஏற்படக்கூடும். சிவபெருமான் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

முல்லைத்தீவில் 71.76 வீத வாக்கு பதிவு !

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் அனைத்தும் பூர்த்தியடைந்து எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்களார்கள் 86ஆயிரத்தி 889 பேர் தகுதி பெற்றுள்ளார்கள் இவர்கள் மாவட்டத்தில் உள்ள 137 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாறு வாக்களித்தவர்களில்71.76 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள் 62ஆயிரத்தி 358 வாக்காளர்களே வாக்களித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தபால் மூலமாக 3515 பேரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று 58846 பேரும் வாக்களித்துள்ளார்கள்.

தபால் மூல வாக்கெண்ணும் நவடிக்கைகள் வாக்கெண்ணும் நிலையமான முல்லைத்தீவு மத்திய கல்லூரியான வாக்கெண்ணும் நிலையத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த மாவட்டம்

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய முதன்முறையாக நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்தை தாண்டியுள்ளதுடன் இது வரலாற்றில் அதிகூடிய வாக்குப்பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

வரலாற்று சாதனை
இதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும், கொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்களும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 வாக்காளர்களும் ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சமூக ஊடக பதிவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போதுமானதாக இல்லாவிட்டாலும் இறுதி முடிவாக இவ்வாறானவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாரபட்சம் விளைவிக்கும் சட்டவிரோத விளம்பர திட்டங்களை நீக்குமாறு Meta, YouTube, Tiktok மற்றும் Google போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுமார் ஆயிரம் சமூக ஊடக பதிவுகளில் தேர்தல் விதிமுறைகளை மீறப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்படுத்தும் பாதுகாப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான விமானப்படையினர் தற்போதைக்கு விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையாற்றியிருப்பதாலும், காவல்துறை வீதித் தடைகள் நடைமுறைப்படுத்த உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊர்வலம் செல்வது முற்றாக தடை
இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மற்றும் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119 118 107 (வடக்கு, கிழக்குக்கு) 011 202 7149 011 201 3243 111 239 9104 – (தொலைநகல் எண்)

வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் கைது!

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதி யின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.