இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை

சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.

சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில், சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

இதன்போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைத்தேன்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அவர்களிடம் பேசினேன்.

இதனால் எவ்வித பாதிப்பும் சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்படாதென தெரிவித்தனர்.

குறித்த ஒப்பந்தம் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இருப்பதாகவும் இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய நாடுகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நாட்டை கண்காணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏறத்தாழ இங்கு 50 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள், இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, காணாமல் போகிறார்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெறவில்லை, பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என கேட்டபோது,

சுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சமடைந்திருக்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்வதாகவும் அவர்கள் தஞ்சம் கோரும் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களின் அகதி தஞ்சம் கிடைக்கும்.

இதேவேளை இலங்கை தொடர்பில் அனைத்தும் தெரிந்தவரே அவர்களை விசாரணை செய்வார். இதனால் அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு அகதி தஞ்சம் கிடைக்கும் என தெரிவித்தனர்.

நான் இங்கு இருக்கும் உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புவது,

நான் ஒரு சுவிஸ் அரசியல்வாதி. நீங்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களது வழக்குகளை விசாரித்து நடத்த முடியாது.

ஆகவே நீங்கள் சிறந்த சட்டத்தரணி மூலம் உரிய ஆதாரங்களை திரட்டி இதனை மேற்கொள்ளுங்கள்.

சட்டத்தரணிகள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் என்னுடன் தொடர்பு கொண்டால் உதவி செய்ய முடியும்.

இன்று என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவரும் சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவர்களாவர்.

எனினும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை.

உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் தெரிவித்தாக தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்தார்.

நீர்க் கட்டணங்கள் அதிகரிப்பு!

நீர்க் கட்டணங்களை உயர்த்துவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நீர்க் கட்டணங்களும், மாதாந்த சேவைக் கட்டணங்கள் என்பன இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.

சில பிரிவுகளில் சுமார் 30 வீதம் முதல் 50 வீதம் வரையில் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.

சமுர்த்தி பெறுனர்கள் தவிர்ந்த ஏனைய பாவனையாளர்கள் 0 முதல் 5 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாவிலிருந்து 16 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதுடன் மாதாந்த சேவைக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 250 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.

16 அலகு முதல் 20 அலகு வரையிலான அலகுகளுக்கான கட்டணங்கள் 40 ரூபாவிலிருந்து 52 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதுடன் 80 ரூபாவாக காணப்பட்ட மாதாந்த சேவைக் கட்டணம் 400 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கான 0 முதல் 5 அலகுகளுக்கான மாதாந்த சேவைக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அலகு ஒன்றுக்கான கட்டணம் 6 ரூபாவிலிருந்து 7 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

நான்கு ஆண்டுகளின் பின்னர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பாவனையாளாகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார்.

சிவாலய வழிபாட்டிற்கு சில டிப்ஸ்

சிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும்.

திருக்கோவிலை அடைந்ததும் திருக்கோபுரத்தைத் தரிசித்து சிவநாமங்களை உச்சரித்து உள்ளே போக வேண்டும்.

முதலில் பலிபீடத்தையும் கொடி மரத்தையும் ரிஷப தேவரையும் கும்பிட வேண்டும்.

வடக்கு, மேற்கு நோக்கிய சன்னதியாயின் இடப்பக்கத்திலும் கிழக்கு, தெற்கு நோக்கிய சன்னதியாயின் வலப்புறத்திலும் நின்று வணங்க வேண்டும்.

வீழ்ந்து வணங்கும்போது தலை, இரண்டு செவிகள், இரண்டு கைகள், கால்கள், முகம் இவை நிலத்தில் படும்படி ஆண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தலை, இரு கைகள், முழங்கால்கள் இவை பூமியில் பதிய பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்காரம் மூன்று, ஐந்து அல்லது ஏழு தடவை செய்தல் நலம்.

கீழே விழுந்து வணங்கும்போது மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் கால் நீட்ட வேண்டும். கிழக்காகவும் வடக்காகவும் நீட்டக் கூடாது.

கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றபின் எந்த இடத்திலும் வீழ்ந்து வணங்குதல் கூடாது.

நமஸ்காரம் செய்தபின் திருநாமம் உச்சரித்து அடிமேல் அடி வைத்து மெல்ல வலம் வரவேண்டும்; தெய்வ வாகனங்களையும் சேர்த்துத்தான் வலம் வர வேண்டும்.

ஒரே திருக்கோவிலில் உள்ள கணபதி – முருகன் – அம்பாள் சன்னதிகளை தனித்தனியாக வலம் வரக் கூடாது. சேர்த்துப் பொதுவாக வலம் வர வேண்டும்.

வஸ்திரங்களால் உடலை மூடிக் கொண்டு வலம் வரவோ, வழிபடவோ கூடாது.

வலம் வந்த பின்னர் துவார பாலகரை வணங்கி, நந்திதேவரைத் துதித்து உள்ளே செல்ல வேண்டும்.

விநாயகரை தரிசித்து, பின் சிவனையும் – தேவியையும் வழிபட்டு, பின்னர் சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர் முதலிய மூர்த்திகளையும் சமயக் குறவர்களையும் வழிபட வேண்டும். வழிபட்டதும் வடக்காக சண்டிகேஸ்வரரை அடைந்து மூன்று முறை மெலிதாகக் கை தட்டி பிரார்த்திக்க வேண்டும்.

பின் வலமாக வந்து நந்திதேவரின் இரண்டு கொம்புகளின் இடைவெளி வழியாக பெருமானை தரிசித்து, பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை வீழ்ந்து வணங்க வேண்டும்.

டொனால்டு டிரம்ப்புக்கு ஓட்டு போட்ட நபரை தாக்கிய இளைஞர்கள் (வைரல் வீடியோ)

இயல்பாக மூச்சு விடுவதால் ஜெயலலிதாவுக்கு வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றம்

இயல்பாக மூச்சு விடுவதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது.
உடல்நிலையில் முன்னேற்றம்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர். தற்போது, ஜூடி என்ற பிசியோதெரபி நிபுணர் மட்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார். நேற்றும், அவர் சிகிச்சையை தொடர்ந்தார்.
செயற்கை சுவாசம் அகற்றம்
நேற்று 51-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் இல்லாமலேயே, தொடர்ந்து 14½ மணி நேரம் இயல்பாக சுவாசித்தார்.
நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அதிகாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வெகு நேரம் அவர் இயல்பாகவே மூச்சு விட்டார். நீண்ட நேரம் நாற்காலியிலும் அமர்ந்திருந்தார். எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெகு விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.ராமநாதன், இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் எம்.ரசாக் உள்ளிட்டோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.
நல்ல செய்தி
ஆஸ்பத்திரிக்கு வெளியே, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிக விரைவாக பூரண குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்பி அரசு மற்றும் நிர்வாக பணியை மிக வேகமாக தொடருவார் என்ற நல்ல செய்தியை சொன்னார்கள்.
நாட்டுமக்களுடைய வேண்டுதல், பிரார்த்தனைக்கு கிடைத்த பலனாக ஜெயலலிதா நெருக்கடியான, கடினமான நிலையில் இருந்து மீண்டு மிக வலிமையாக மக்களுடைய ஆதரவோடு முழுமையான குணமடைந்து இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நலத்திட்டங்களை தந்து அரசு நிர்வாகத்தை நடத்துவார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் அவர் பரிபூரண குணமடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கங்கையில் மிதந்த பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். அதிர்ச்சி தகவல்

பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு சாமானிய மனிதர்களுக்கு சிறுசிறு கஷ்டங்களை கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கில் கருப்புப்பணத்தை பதுக்கியவர்களுக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை கொடுத்துள்ளது.

தங்களிடம் உள்ள கருப்புப்பணத்தை மாற்ற முடியாமல், வெளியே சொல்ல முடியாமல் உள்ள அந்த நபர்கள் செல்லாத கருப்புப்பணத்தை பல வழிகளில் வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ அருகே மிர்சாபூர் என்ற பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்தபடி வந்ததாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள கோட்வாலி  காவல் நிலைய அதிகாரிகள் ஆற்றில் மிதந்த கரன்சியை சேகரித்தனர். எவ்வளவு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மிதந்தன என்பது குறித்து காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சவுந்தர்யா – தனுஷ் புது முடிவு

கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் திரையுலகில் முழுகவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.

புதிய படம் இயக்க முடிவு செய்தவர் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்க முடிவு செய்தார். ஹீரோவாக மோகன்லால் மகன் ஜீத்து ஜோசப்பை நடிக்க வைக்க பேச்சு நடந்தது. அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தந்தை ரஜினியிடம் ஆலோசித்தபோது, தனுஷை நாயகனாக வைத்து இயக்க யோசனை கூறினார்.

தனுஷுடம் பேசியபோது, ஏற்கனவே தான் நடித்து வெற்றி பெற்ற, வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாக கதை வசனத்தை தான் எழுதுவதாகவும் அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கும்படி சவுந்தர்யாவிடம் தெரிவித்தார் தனுஷ். அதை ஒப்புக்கொண்டார்.

இப்படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி தேர்வு நடக்கிறது. ஏற்கனவே இயக்குவதாக இருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை சவுந்தர்யா நிறுத்தி வைத்திருக்கிறார்.

 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் உலக நாடுகள்

அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

உலகம் முகம் கொடுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய எரிபொருள் காணப்படும் என இலங்கை விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

68 வருடங்களின் பின் பெரிய சந்திரன்

பூரண சந்திர தினமான எதிர்வரும் திங்கட்கிழமை (14) மிகப் பெரிய சந்திரனை (Super Moon) அவதானிக்கலாம் என இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

68 வருடங்களின் பின், பூமியில் இருந்தவாறு அவதானிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சந்திரனை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சாதாரணமான சந்திரனின் தோற்றத்திலும் பார்க்க 14% பெரிய சந்திரனை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30% அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வு 68 வருடங்களுக்கு முன்னர் 1948ல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நிகழ்வு இன்னும் 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக டிரம்ப்: இத்தாலியில் குடிபெயரவிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவானதை அடுத்து பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ராபர்ட் டி நீரோ இத்தாலியில் குடிபெயர்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ருள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு அமெரிக்க நடிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அது டிரம்பிற்கு எதிரான எதிர்ப்பை காட்டும் கலவரமாக பல பகுதிகளிலும் மாறியுள்ளது.

கடந்த புதன் அன்று தனியார் ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நீரோ, தாம் இத்தாலியில் குடிபெயர்வது குறித்து யோசித்து வருவதாக வேடிக்கையாக பேசினார்.

தற்போது நீரோவின் இந்த கருத்தை அறிந்த இத்தாலியின் Ferrazzano மேயர், நடிகர் நீரோவை வரவேற்க காத்திருப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றும், இது நடந்தால் அது பெரும் மகிழ்ச்சியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார காலகட்டத்தில் டிரம்பை கடுமையாக சாடியவர் நீரோ. அதிகம் வாய் பேசும் டிரம்பின் முகத்தில் குத்துவேன் என்றும் நீரோ பேசியிருந்தார்.

நடிகர் நீரோவின் மூதாதையர்கள் அனைவரும் இத்தாலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு ஒன்று நடத்தப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்தரங்கை நடத்த உள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை ஷங்ரீலா ஹோட்டலில் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் இந்த கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

பிரதமர் ரணில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் துறைசார் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்று வரவு செலவுத் திட்டம் குறித்து தெளிவுபடுத்தவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகமும் நிதி அமைச்சும் கூட்டாக இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசி பலன் 12-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். இரவு 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிறப்பான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமை
    யும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். இரவு 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்

  • துலாம்

    துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றி
    யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: இரவு 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

 

வயிறு குலுங்க குலுங்க சிரிக்கனுமா? அப்போ இந்த வீடியோ பாருங்க!

எங்க இருந்து டா நீங்கெல்லாம் வாரீங்க??

வடிவேலின் நடிப்பையே இவங்க மிஞ்சிடுவாங்க போல இந்த பொண்ணுங்க!

T.R.ராஜேந்திரனுக்கு ஜோடியான கல்பனா அக்கா!

மிரள வைக்கும் சாகசத்தில் அசத்தும் குட்டிச் சிறுவன்!

பிரபல டி.வி.நடிகை சபர்ணா தற்கொலை?அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு

பிரபல டி.வி.நடிகை சபர்ணா வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சில சினிமா படங்களில் நடித்துள்ளார்.
சபர்ணா மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளது

பன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி… ரொம்ப ஆச்சரியமா இருக்குதா?.

டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றிவாக்கை சூடுவார் என அமெரிக்கா மட்டுமல்ல, உலகும் நம்பியது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் அனைவரையும் அதிர்ச்சி அடையவைக்கும் வகையில் வெற்றிவாகை சூடி அமெரிக்காவின் 45வது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார்.

டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் செய்பவர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள் சில இனி…

உண்மை #1

டொனால்ட் ட்ரம்ப்புக்கு அதிக ஒழுக்க பண்புகள் தேவை என்பதால், 13 வயதிலேயே மிலிட்டரி பள்ளியில் இவரது பெற்றோர் இவரை சேர்த்துவிட்டனர்.

உண்மை #2

“The Apprentice” என்ற நிகழ்ச்சியில் ஒரு எப்பிசொடுக்கு $3,75,000 டாலர்கள் சம்பாதித்து ஹிட் அடித்தார் டொனால்ட்.

உண்மை #3

டொனால்ட் ட்ரம்ப்-க்கு குடிப் பழக்கம் இல்லை. இவரது சகோதரர் இந்த பழக்கத்தால் கடந்த 1982-ம் ஆண்டு இறந்ததில் இருந்து இவர் குடிப்பதில்லை.

உண்மை #4

டொனால்ட் ட்ரம்ப் தனது பெயரிலேயே ஒரு போர்ட் விளையாட்டை  உருவாக்கினார். 1989-ல் நிறுத்தப்பட்ட இந்த போர்டு விளையாட்டு, “The Apprentice” புகழுக்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டது.

உண்மை #5

ட்ரம்ப் டவர் எனும், டொனால்ட் ட்ரம்ப்பின் வீடு தி டார்க் நைட் ரைசஸ் என்ற படத்தில் வேனே எண்டர்பிரைசஸாக (Wayne Enterprises) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #6

ட்ரம்ப் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்காமல் போயிருந்தாலும் பணக்காரராக தான் இருந்திருப்பார். காரணம், அவரது தந்தை அவருக்கு தேவையான அளவிற்கு மேல் சொத்து வைத்திருந்தார்.