இலங்கை வாக்குச்சீட்டில் மாற்றம் ஏற்ப்படுத்தப்படுமா?

இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவின்(russia) தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஷெவ்சென்கோ எவ்ஜெனி(Shevchenko Evgenii),இலங்கையில் காகித வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைக்கு வருவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாங்கள் (ரஷ்யா) காகித வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகள் மூலம் மின்னணு மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம், இது எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணையத்துடன் விவாதிக்கப்படுகிறது.

இலங்கை தேர்தல் ஆணையம் முறையான அழைப்பு
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் திட்டத்தில் கண்காணிப்பாளர்களாக பங்கேற்க ஏழு நாடுகளுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் முறையான அழைப்புகளை விடுத்துள்ளது.

ரஷ்ய கூட்டமைப்பு(russia), மாலைதீவுகள்(maldives), பூட்டான்(Bhutan), நேபாளம்(nepal) மற்றும் பங்களாதேஷ்(bangladesh) ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம்(jaffna), திருகோணமலை(trincomale), கொழும்பு(colombo) உள்ளிட்ட இலங்கையில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சர்வதேச பார்வையாளர்கள் வருகை தரவுள்ளதாக மாலைதீவு(maldives) தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஃபுவாட் தௌஃபீக்(Fuwad Thowfeek) தெரிவித்துள்ளார்.

“தேர்தல் அமைப்பை மேற்பார்வையிடுவதும், அது தேர்தல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதையும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திரம் இருப்பதையும் உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

நாங்கள் தேர்தலை கண்காணித்து, அங்கீகரிக்கப்படாத அல்லது விரும்பத்தகாத செயல்களைக் அறிக்கையிடுவோம்,” என்று அவர் கூறினார்.

காவல்துறையிடம் கலந்துரையாடல்
இலங்கையில் காவல்துறை மா அதிபர் ஒருவர் இல்லாதது குறித்து கேட்டபோது, ​​தேர்தல் காலம் முழுவதும் பூரண ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர்.

தேர்தலில் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு முன்பு வேட்பாளர்களுக்கு அவர்கள் அளிக்கும் எண்களுடன் தயாராக இருக்குமாறு வாக்காளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

நாடளாவிய ரீதியில் 80 கண்காணிப்பாளர்கள்
” தேர்தல் கண்காணிப்பை வலுப்படுத்த தேர்தல் ஆணையம் உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகச் செயற்படும் வகையில், 80 கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் தீயில் எரிந்து வயோதிப பெண் பலி!

யாழ்ப்பாணம்-நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதனால் தீயில் சிக்கி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எரிந்த நிலையில் வீட்டுக்கு வௌியில் காணப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் வாசலிலே மிளகாய் தூள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்தார்களா, அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

வீடொன்றில் பெண் கொலை!

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெங்கிரிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

பெங்கிரிவத்த – சன்தானம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் நீண்ட நாட்களாக சாரதியாக பணியாற்றிவந்த ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகிறது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிஸ்லாந்தில் மக்கள் தொகை உயர்வு!

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மில்லியன் வரை உயர்வதற்கு 12 ஆண்டுகள் ஆனது (2012 முதல் 2024 வரை), எனவும், அதேவேளை 5-யில் இருந்து 6 மில்லியனாக அதிகரிக்க 12 ஆண்டுகள் (1955-1967) எடுத்ததுள்ளது எனவும் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரவுகளின் அடிப்படையில் நிரந்தரமாக வசிப்பவர்களில் 6,560,361 பேர் சுவிஸ் மக்கள் என்றும் 2,442,402 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த தரவுகளின் படி, 20 மற்றும் 64 வயதுக்கு இடைப்பட்டவர்கள் சுமார் 5.460 மில்லியன் மக்கள் எனவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கிட்டத்தட்ட 1.790 மில்லியன் எனவும், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.753 மில்லியன் எனவும் தெரியவருகின்றது.

கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இறுதியில், சுவிஸில் முதன்முறையாக 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவது கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போன்ற நிரந்தரமற்ற வெளிநாட்டவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டது.

உலகளவில் GOAT 16 நாட்களில் செய்த வசூல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான முதல் படமும் இதுவே ஆகும். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பிரஷாந்த், லைலா, பிரபு தேவா, சினேகா என 90ஸ் நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஒரு பக்கம் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது GOAT.

வசூல்
இந்த நிலையில் உலகளவில் 16 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT படம் உலகளவில் 16 நாட்களில் ரூ. 410 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் GOAT படத்தின் வசூல் எந்த அளவிற்கு உச்சத்தை தொடும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

முத்துவின் போனை எடுக்க வந்த ரோகினி முத்துவிடம் சிக்குவாரா?

சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் தற்போது பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது முத்துவிடம் இருக்கும் ஆதாரம் ஒன்றை அனைவருக்கும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என சிட்டி முயற்சி செய்து வருகிறார்.

அதற்கு ரோகினியை பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளார். முத்துவின் போனில் மீனாவின் தம்பி குறித்தும் இருக்கும் ரகசியத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டால், ரோகினியை தொந்தரவு செய்பவரை பார்த்துக்கொள்வதாக சிட்டி கூறியிருந்தார்.

இதனால் முத்துவின் போனில் இருக்கும் விஷயத்தை வெளிக்கொண்டுவர ரோகினி முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அடுத்த வாரம்

இந்த ப்ரோமோவில், தூங்கி எழுந்த முத்து தனது படுக்கையிலேயே தன் செல்போனை விட்டு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முத்துவின் செல்போனை எடுக்க முயற்சிக்கிறார் ரோகினி. ஆனால், அந்த சமயத்தில் திடீரென முத்து அங்கே மீனாவை தேடி வர, உடனடியாக அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் ரோகினி.

இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று அடுத்தவாரம் எபிசோடில் தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம், முத்துவிடம் இருக்கும் ஆதாரத்தை ரோகினி வெளிக்கொண்டு வருகிறாரா என்று.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் அட்லீ சொத்து மதிப்பு.

இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது.

முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

சொத்து மதிப்பு
இன்று தனது 38 – வது பிறந்தநாளை கொண்டாடும் அட்லீக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குனர் அட்லீ சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது

முகத்தில் இந்த பொருட்களை மறந்தும் கூட பயன்படுத்தாதீர்கள்!

பொதுவாக பெண்கள் தங்களின் அழகை பார்த்து கொள்ள பெரிதும் விருப்பம் காட்டுவார்கள்.

இதனால் சமூக ஊடகங்களில் பார்க்ககூடிய அழகு குறிப்புகள் மற்றும் இரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகளை முகத்திற்கு அப்ளை செய்து பார்ப்பார்கள்.

இப்படி பயன்படுத்தும் பொருட்கள் தோல் பலவிதமான பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். அதனால் அழகு குறிப்பு பார்க்கும் போது அவை உங்களுக்கு பொருந்துமா? பொருந்தாதா? என ஆராய்ந்த பின்னரே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் மறந்தும் பயன்படுத்தக் கூடாதபொருட்கள் என்னென்ன? அவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன? என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1.பேஸ்ட்
பல் துலக்கும் பேஸ்டை முகத்தில் லெமனுடன் சேர்த்து அப்ளை செய்து வந்தால் முகம் வெள்ளையாக மாறும் என நாம் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம். ஆனால் இந்த குறிப்பு உங்கள் முகத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். உதாரணமாக பருக்கள் , கரும்புள்ளிகள், தடிப்பு, வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றலாம்.

2. சமையல் எண்ணெய்கள்
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை எக்காரணம் கொண்டும் முகத்தில் நேரடியாக அப்ளை செய்யக் கூடாது. இந்த வகை எண்ணெய்கள் உங்கள் முகத்திற்கு ஒத்துப் போகுதா? என்பதனை ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துங்கள். ஏனென்றால் எண்ணெய்கள் தோலில் துளைகளை அடைத்து முகப்பருக்களை உண்டாக்கும். சில வேளைகளில் சருமத்தில் எறிச்சலும் உண்டாகலாம்.

3. வாசனை திரவியங்கள் (Body lotion)
சிலருக்கு முகத்தில் Body lotion அப்ளை செய்யும் பழக்கம் இருக்கும். Body lotion கைகள், கால்கள், தொடைகள் மற்றும் முதுகு போன்ற உடலின் அடர்த்தியான தோல் உள்ள இடங்களில் அப்ளை செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை. இவற்றை முகத்தில் அப்ளை செய்யும் போது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் முகத்திற்கு க்ளென்சர்கள், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் போன்றவை தான் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய ராசிபலன்கள் 21.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடை கள் விலகும்அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதன் காரணமாக சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட சிரமங்கள் குறையும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத் தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போல் நடைபெறும். இன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

அனுகூலமான நாளாக இருக்கும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மகா விஷ்ணுவை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சியைத் தொடங்க உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் சேரும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு உகந்த நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட பிரச்னைகள் நீங்கிவிடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல

இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல. வளர்ச்சிக்கான நண்பர்கள் என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் டில்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் ஷியு பெய்ஹோங் கூறியதாவது, அதன்படி இந்தியாவும், சீனாவும் இரண்டு பெரிய மற்றும் வளரும் நாடுகள்.

நாடுகளுக்கு பொருளாதாரத்தை வளர்ப்பது மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்ற இரண்டு முக்கிய கடமைகள் உள்ளன.

மேலும் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறுவது என இந்தியா தீர்மானத்தில் உள்ளதுடன் நீண்ட காலமாக இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தொடர்பில் வெளியான செய்தி!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை
இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன.

விடயம் என்னவென்றால், கனடா இதற்கு முன் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது, தற்போது நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

கனடா இரண்டாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கு இறங்கியதற்கு முக்கிய காரணம், அது, வர்த்தகம் செய்வதற்கான அனுமதி வழங்குதல், பாரம்பரியம் மற்றும் தொழில் முனைவு போன்ற விடயங்களில் குறைவான புள்ளிகளைப் பெற்றதுதான்.

அதே நேரத்தில், ஆய்வுகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் மற்ற நாடுகளால் ஒரு நாடு எப்படிப்பட்டது என பார்க்கப்படுகிறது, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சுற்றுலாவுக்கு உகந்த இடம் ஆகிய விடயங்களில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது கனடா.

ஆகவேதான், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடிக்க கனடாவால் முடிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

MAl’ ரத்த வகை எனும் புதிய ரத்தவகை கண்டுபிடிப்பு!

பிரித்தானிய விஞ்ஞானிகள் 50 ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய இரத்த வகையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் புதிய ‘MAl’ என்ற ரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர்.

இது ஏற்கனவே உள்ள 4 முக்கிய ரத்த வகைகளுக்கு (A, B, AB, O) மேலாக வரும் ஒரு புதிய வகையாகக் கருதப்படுகிறது. இந்த புதிய ரத்த வகையை அடையாளம் காண, ஆய்வு குழு 5000 பேரின் ரத்தத்தை ஆராய்ந்தது. ‘

‘MAl’ ரத்த வகை
MAl’ ரத்த வகை, மனித உடலின் இயல்புகளை மேலும் புரிந்து கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

‘MAl’ ரத்த வகை, ரத்த மாற்றம் மற்றும் ரத்ததானம் தொடர்பான செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவசர மருத்துவ உதவிகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு, ரத்தவியல் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் புதிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ‘MAl’ ரத்த வகையைப் பற்றிய மேலதிக ஆய்வுகள் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நடைபெற்று வருகிறது.

இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் குறித்த புதிய கண்டுபிடிப்பு, மனித உடலின் ரத்தவியல் தொடர்பான மேலதிக புரிதலுக்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ‘MAl’ ரத்த வகை, மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து பலர் மருத்துவமனையில்!

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) மாலை கும்புக்கன பகுதியில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இரு கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளாவட்டவான் கிராம சேவகர் பிரிவில், யாட் வீதியில் உள்ள வெற்றுக் காணி அருகில் இருந்து இன்று (20.09.2024) இக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுணதீவு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக இவ் இரண்டு கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாண்டியடி விஷேட அதிரடிப்படையினர் குறித்த இரண்டு குண்டுளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதிவரை அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிரசாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தினை அண்மித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் கட்சி முதல் மாநாடு… எப்போது எங்கே தெரியுமா?

தமிழ் சினிமானை ஆண்டு வரும் நடிகர் விஜய். இவர் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும்.

அண்மையில் இவரது 68வது படமான கோட் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றுள்ளார், அடுத்த படத்திற்கு இன்னும் அதிகம் என கூறப்படுகிறது.

இப்போது விஜய்யின் கோட் படம் ரூ. 300 கோடிக்கு மேலான வசூல் வேட்டையில் உள்ளது.

முதல் மாநாடு
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு எப்போது, எங்கே என அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளது. விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு நடக்க உள்ளதாம்.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசாரின் முக்கிய தகவல்!

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பிரதேசத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல்
தெஹிவளை மாநகர சபையில் கடமையாற்றும் 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த பிரதேசத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.

இவர் இதற்கு முன் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் சம்பளம்
இன்று (20.09.2024) இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளிவந்த தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் லைக்காவின் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

அந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரூ. 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதில் வேட்டையன் படத்திற்கு ரூ. 100 கோடி சம்பளமும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளமும் ரஜினிகாந்த் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இரு தபால் ஊழியர்களின் சேவை இட நிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில் பணிபுரிவதாக சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.

அதேவேளை 148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் குறித்த வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித. கே. ரணசிங்க தெரிவித்தார்.

இதன்படி தற்காலிகமாக கடமையாற்றிய குறித்த கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.