வவுனியாவில் விடுதி வசதி இல்லாமையினால் கல்வியை கைவிடும் மாணவர்கள்

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரிக்கு விடுதி வசதி அமையுமாக இருந்தால் அதிகளாவன மாணவர்கள் கற்கும் வசதி ஏற்படும் என வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக்கல்லூரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வருடம் 645 மாணவர்கள் எமது தொழில்நுட்பக்கல்லூரியில் பதிவினை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் 500 மாணவர்களே பரீட்சையில் தோற்றவுள்ளனர். 145 மாணவர்கள் இடை விலகிவிட்டனர். இடை விலகியவர்கள் தூர இடங்களில் இருந்து வருவதனால் போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் தங்குமிடங்களுக்கும் அதிகளவான நிதியை செலவிடவேண்டியேற்படுகின்றது.

எனவே எமது தொழில்நுட்பக்கல்லூரியில் விடுதி வசதி இருக்குமாயின் அதிகளவான மாணவர்கள் தங்கி நின்று கற்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன் இடை விலகலும் குறைவாக காணப்படும்.

இந் நிலையில் எதிர்வரும் 21 ஆம்திகதி முடிவுத் திகதியிடப்பட்டு 24 பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. இவற்றில் முழு நேர பயிற்சி நெறிகள் இலவசமாக கற்பிக்கப்படும் என்பதுடன் அவர்களுக்கான பயண பருவச்சீட்டுகளும் 1000 ரூபா ஊக்குவிப்பு பணமும் வழங்கப்படவுள்ளது.

எனவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த 17 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விண்ணப்பித்து சிறந்த கற்றல் செயற்பாடுகளில் இணைந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

யார் எதிர்த்தாலும் எனது மகனை அரசியலுக்கு கொண்டு வருவேன் – முன்னாள் ஜனாதிபதி

எவர் எதிர்த்தாலும் தனது புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக நியமித்து, அடுத்த தேர்தலுக்கு அவரை தயார்ப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை கொண்டு வரப்பட்ட போது கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விமுக்தி மக்கள் மத்தியில் இருக்காத காரணத்தினால், அவரால் தேர்தலில் வெற்றிப் பெற முடியாது என சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதியின் முகத்திற்கு நேராக கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், அடுத்த தேர்தலில், விமுக்தியை அத்தனகல்ல தொகுதியில் நிறுத்த முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் லண்டனில் இருக்கும் விமுக்தி குமாரதுங்க விரைவில் இலங்கைக்கு அழைக்கப்படவிருப்பதாக பேசப்படுகிறது.

புதிதாக முளைத்த இராட்சத முள்ளங்கி! வரிசையாக நிற்கும் பொது மக்கள்!

மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.

விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3

இலங்கையர்கள், வெளிநாடுகளின் பயங்கரவாத அமைப்புக்களில் இணைவதை அரசாங்கம் அறிந்துள்ளது

வழமையான பயங்கரவாதத்தில் இருந்து இலங்கை விடுதலைப்பெற்றுள்ளது. எனினும் இலங்கையர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களில் இணைவதை அறிந்துள்ளதாக இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா பாலியில் இடம்பெற்ற ‘இன்டர்போல்’ பொதுச்சபை அமர்வில் பங்கேற்றபோதே ஜெயசுந்தர இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கையர் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்டமையை அடுத்தே இலங்கையர்கள், வெளிநாடுகளின் பயங்கரவாத அமைப்பில் இணைந்துக்கொள்ளும் தகவல்கள் தெரியவந்தன.

இலங்கையை பொறுத்தவரை, பல ஆண்டுக்களாக அது பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும் 2009ஆம் ஆண்டு பயங்கரவாதம் அடியோடு வேறெடுக்கப்பட்டது. தற்போது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நல்லிணக்க மீள்கட்டமைப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இலகுவானவை என்பதை இலங்கையின் படையினர் அறிந்துள்ளனர்.

எனினும் பல்வேறு நாடுகளின் பல்வேறு நீதிமுறைகளின் கீழ் செயற்படும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க முன்வரவேண்டும் என்றும் ஜெயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரான் அலஸ் பிணையில் விடுதலை!

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ்ஸை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தவைிட்டுள்ளது.

டிரான் அலஸ்ஸை பிணையில் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு அமைய இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராடா என்னும் நிறுவனத்தின் ஊடாக சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக சுமார் 200மில்லியன் ரூபா நிதி மோசடி செய்ததாக டிரான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும்.இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நகை வாங்க பான் கார்டு அவசியம்: மோடி அரசின் அடுத்த அதிரடி

இந்திய நாட்டில் புழங்கி வரும் கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

அதே நேரத்தில், மக்கள் வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும், அதற்கான முழு மதிப்பு தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் இயங்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், நகைகடைகளில் நகை வாங்குவதற்கு பான் கார்டு மிகவும் அவசியம் என அடுத்த அதிரடி நடவடிக்கையாக அரசு காயை நகர்த்தியுள்ளது.

மேலும், பான் கார்டு இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்யக்கூடாது என மத்திய வருவாய் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

அமேஷான் சேவையை பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?

உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் வியாபார நிறுவனமாக விளங்கும் அமேஷான் தளமானது பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் வரிசையில் தற்போது வீடுகளுக்கு சென்று அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்கும் சேவை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

இச்சேவையினை அமேஷான் தளத்தில் ப்ரைம் மெம்பர் கணக்கு வைத்திருப்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

பொதுவாக வீட்டிலுள்ள தம்பதியர்கள் பணிக்கு செல்லும் சமயங்களில் தமது வீட்டினை பராமரிக்க மிகவும் சிரமப்படுவார்கள்.

இப்படியானவர்களை இலக்கு வைத்து இச் சேவையினை அமேஷான் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இச் சேவையின் பயனாக வீட்டு உரிமையாளர்கள் தமது வேலைச் சுமையினை குறைத்துக்கொள்ள முடியும்.

மேலும் இச்சேவையினைப் பெற விரும்புவர்கள் விண்ணப்ப படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக விண்ணப்பப்படிவம் விரைவில் ஒன்லைனில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞன்! தனி நபராக படைத்த சாதனை

உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கத்தால் பல காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அல்லல்படுகின்றனர்.

இதனையடுத்து மனித ஆர்வலர்கள் பலரும் செடிகள் நட்டு அதை காடுகளாக மாற்றி இயற்கையை இன்னும் வாழ வைத்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் இந்தியாவை சேர்ந்த Shubhendu Sharma என்னும் மனிதர்.

டோயோடா கார் நிறுவனத்தில் பொறியாளராக மிக அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்த இவர் மரம் வளர்ப்பு, காடுகள் உருவாக்குதல் போன்றவற்றுக்காக தன் வேலையையே உதறி தள்ளியுள்ளார்.

இதுவரை ஈராக், பாகிஸ்தான் உட்பட 6 நாடுகளில் உள்ள 28 நகரங்களில் 85க்கும் மேற்ப்பட்ட காடுகளை Shubhendu உருவாக்கியுள்ளார்!.

இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை மீது பிரியம் அதிகம். நான் வேலை செய்த நிறுவனத்தின் சுற்றுப்புறங்களில் மரங்கள் நடுவதற்கு Akira Miyawaki என்னும் தாவரவியல் பட்ட படிப்பாளர் தன் குழுவுடன் வந்தார்.

நானும் இது போல மரங்கள் நட்டு உலகை என்னால் முடிந்த வரை செழிப்பாக மாற்ற வேண்டும் என அவரிடன் கூறினேன், அதற்கு அவர் உதவினார்.

Miyawaki தொழில்நுட்பம் என்னும் முறையை அவர் சொல்லி தந்தார். அதாவது வித விதமான செடிகளை அந்த மண்ணின் தரம் அறிந்து ஒரு சிறிய இடத்தில் அருகருகே நடுவது தான் அந்த நுட்பமாகும்.

அதன் படி செடிகள் நடும் பணியை முதன் முதலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆரம்பித்தேன்.

பின்னர் பல மாநிலங்கள், நாடுகள் என என் மரம் நடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தரிசு நிலங்கள் அனைத்தும் பசுமையாக மாறும் வரை என் பணி தொடரும் என்கிறார் Shubhendu நம்பிக்கையுடன்!.625-0-560-350-160-300-053-800-668-160-90-7 625-0-560-350-160-300-053-800-668-160-90-8

ஹிலாரி கிளிண்டனை கைது செய்கிறாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்தபோது ராணுவ தகவல்களை தனது சொந்த மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது கிளிண்டன் அறக்கட்டளை மூலம் முறைகேடாக நிதிகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.

எனினும், ஹிலாரி கிளிண்டன் குற்றமற்றவர் என்றும் அவர் மீது விசாரணை நடத்த முடியாது என அந்நாட்டு புலனாய்வு துறை இயக்குனரான ஜேம்ஸ் கேமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டொனால்ட் டிரம்ப் ‘ஹிலாரி பயன்படுத்திய 6,50,000 மின்னஞ்சல்களை வெறும் 8 நாட்களில் ஆய்வு செய்ய முடியாத நிலையில், அவரை எப்படி குற்றமற்றவர் என அறிவிக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டன் அரசு அதிகாரிகளால் மிக கவனமாக காப்பாற்றப்படுகிறார்.

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இவ்விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து தனி வழக்கறிஞரை நியமித்து விசாரணை செய்வேன். ஹிலாரி மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை சிறையில் அடைப்பேன்’ என அதிரடியாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று நடந்த முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், அவர் ஏற்கனவே கூறியதுபோல ஹிலாரி கிளிண்டனை விசாரணை செய்ய தனி வழக்கறிஞர் நியமிக்கப்படவுள்ளதாகவும் நேற்றே தகவல்கள் வெளியாகின.

இதுபோன்ற ஒரு சூழலில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான Josh Earnest என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதையை ஜனாதிபதியான ஒபாமா பொதுமன்னிப்பு வழங்குவாரா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்தபோது, ‘தற்போது மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சில கைதிகளுக்கு ஜனாதிபதி ஒபாமா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட நபர்களுக்கு(ஹிலாரி உள்பட) பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஹிலாரிக்கு ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கினால் அவை ஹிலாரி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்துமா? என்ற சந்தேகத்தை அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.

எனினும், கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்தாலும் அல்லது கோரிக்கையை விடுக்காமல் இருந்தாலும், ஹிலாரிக்கு நிச்சயமாக ஒபாமா பொதுமன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில், கடந்த 1974ம் ஆண்டு Gerald Ford தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான Richard Nixon பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனாலும், தற்போது ஹிலாரி கிளிண்டன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒபாமா பொது மன்னிப்பு வழங்கினாலும், சில வாரங்களில் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பின் புதிய அரசாங்கம் வேறு வழக்குகளை ஹிலாரி மீது சுமத்தினால் அவற்றில் இருந்து ஹிலாரி தப்புவது கடினம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SVB Traders

svb_traders_01 svb_traders_02

ஜிம்முக்கு போகாமல் உடல் எடையை குறைக்க சூப்பர் ஐடியா இதோ!

நம் உடல் எடையை குறைக்கவும், உடலில் தேவையில்லாமல் உருவாகும் நோய்களை தடுக்கவும் நடைப்பயிற்சியை விட அருமையான விடயம் இருக்க முடியாது.

ஆனால் அதை சரியாக செய்தால் மட்டுமே அதன் பலனை முழுவதுமாக நாம் அனுபவிக்க முடியும்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு மணிநேரத்திற்கு 4 மைல்கள் என கணக்கு வைத்து நடந்தால் நம் உடலில் இருந்து 400 கலோரியை குறைக்கலாம்.

அதேபோல Pedometerஎன்னும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதை நம் வயிற்று பகுதியில் கட்டி கொண்டால் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை அந்த கருவி துல்லியமாக காட்டும்.

அதே போல எத்தனை படிகள் நாம் நடக்கிறோம் என்பது மிக முக்கியமாகும். ஒரு மைலுக்கு 2000 அடிகள் வைத்து நடந்தால் 100 கலோரிகளை நாம் குறைக்க முடியும்.

ஒரு பவுண்ட் 3500 கலோரி என வைத்து கொண்டால் ஒரு வாரத்தில் அந்த ஒரு பவுண்ட் அளவுக்கு நடந்தால் 500 கலோரியை நாம் நம் உடலில் இருந்து நீக்க முடியும்.

நாம் நடைபயிற்சி செய்யும் முறையும் நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது, நடக்கும் போது நம் பார்வை நேராக இருத்தல் அவசியம் மற்றும் வயிற்று பகுதியை இறுக்க வைத்து கொள்ள வேண்டும்.

நடைபயிற்சி செய்கையில், நம் தாடை பகுதியானது நிமிர்ந்த மேனியில் இருப்பது முக்கியமாகும்.

ஒருவர் புதிதாக நடைபயிற்சி செய்ய தொடங்கும் போது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் அதை செய்யலாம்.

பின்னர் அது பழகியவுடன் 30-60 நிமிடங்கள் என அதை அதிகபடுத்தி கொள்வது சரியானதாக இருக்கும்.

டிரம்பை வெறுக்கிறோம்…அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 276 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டது.

ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிய டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இவரின் இந்த வெற்றி ஹிலாரி ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் அமைந்துள்ள Berkeley என்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 1,000 பள்ளி மாணவர்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் ஒன்று திரண்டு டொனால்ட் டிரம்ப் எங்களின் ஜனாதிபதி கிடையாது என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பள்ளியினை தொடர்ந்து பிற பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறிய இவர்கள், சாலையில் வழியாக அணியாக திரண்டு சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Berenabas Lukas(15) என்ற மாணவி கூறியதாவது, டொனால்ட் டிரம்ப ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளதால் எங்களின் பாதுகாப்பு குறைந்துள்ளதாக உணர்கிறோம். அவரை எங்களின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்பை நாங்கள் வெறுக்கிறோம், அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.625-0-560-350-160-300-053-800-668-160-90-4 625-0-560-350-160-300-053-800-668-160-90-5 625-0-560-350-160-300-053-800-668-160-90-6

இங்கிலாந்தில் இனிப்பு பானங்களின் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை

உடல் பருமனை குறைத்து மக்களின் உடல் நலனை பேணும் வகையில் அனைத்து இனிப்பு பானங்களினதும் விற்பனையை தடை செய்வது குறித்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு பரிசீலனை செய்து வருகின்றது.

இத்திட்டத்தை எதிர்வரும் ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ள அதேவேளை, இதனை வைத்தியசாலைகளில் இருந்து ஆரம்பிக்க எதிர்ப்பார்த்திருப்பதாக சுகாதார சேவைகள் அமைப்பின் தலைவர் சைமன் ஸ்டீவன்ஸ் தெரிவித்தார்.

உடல் பருமன் என்பது நாட்டில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினையை சமாளிக்கும் வகையிலேயே இனிப்பு பானங்களுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாகவே வைத்தியசாலைகளில் இனிப்பு பானங்கள் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இவ்விற்பனை தடை செய்யப்படும் அல்லது இனிப்பு பானங்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்றும் ஸ்டீவன்ஸ் குறிப்பிட்டார்.

ஆறு வயது சிறுவன் கடவுளின் அவதாரமா?

ஆறு வயது சிறுவன் ஒருவன் கடவுளின் மறுபிறவியாக பார்க்கப்படும் ஆச்சரிய நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ்.

இவரின் மகனான பிரன்சு (6) பிறக்கும் போதே அவனுக்கு ஏற்பட்ட விசித்திர நோய் தாக்கத்தின் காரணமாக தலை பெரியதாகவும், குறுகிய கண்களுடன் வாழ்ந்து வருகிறான்.

அந்த சிறுவனால் சரியாக நிமிர்ந்து நடக்க முடியாது. சிறுவன் பிரன்சுவின் உருவத்தை வைத்து அவர் இந்து கடவுளான விநாயகரின் மறுபிறவி என மக்கள் அவனை வணங்கி வருகிறார்கள்.

இது பற்றி பிரான்சுவின் தந்தை கமலேஷ் கூறுகையில், பிறக்கும் போதே பிரான்சு இப்படி தான் பிறந்தான்.

அவன் பிறந்த பின்னர் நாங்கள் அவனை பல மருத்துவர்களிடம் காண்பித்தோம். ஆனாலும் அவன் உருவம் எல்லாரும் போல சாதாரணமாக ஆகவில்லை.

அவனை சிறு வயதிலிருந்தே நான் உட்பட இந்த ஊரில் இருப்பவர்கள் விநாயக கடவுளின் மறுபிறவியாக தான் பார்க்கிறோம்.

அவனும் எல்லாரும் போல தினமும் பள்ளிகூடத்திற்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளான் மற்றும் என் மகன் உடல் அமைப்பு கூட விநாயக கடவுள் போல தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிரான்சு கோவில் வாசலில் உட்காருவான். அவனிடம் பொது மக்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சிறுவன் பிரான்சு கூறுகையில், என் பெயர் கூட இங்கு நிறைய பேருக்கு தெரியாது.

எல்லோரும் என்னை கணேசா என தான் அழைப்பார்கள். என் பள்ளி ஆசிரியர்களும், உடன் படிக்கும் மாணவர்களும் என்னை வணங்குவார்கள், அவர்களை ஆசிர்வதிப்பேன் என கூறியுள்ளான்.

சிறுவன் பிரான்சுக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என்பதும், அவர்களின் ஒரு சகோதரருக்கு இதே போன்ற விசித்திர உடல் பிரச்சனை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரவன்சவின் வீட்டில் இளைஞன் மரணம் – தொலைபேசிகளின் ஊடாக விசாரணை தீவிரம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த மரணம் தொடர்பில் ஏழு தொலைபேசி அழைப்புக்கள் வழியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி 24 வயதான லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மூன்று தொலைபேசி நிறுவனங்களின் இலக்கங்கள் ஊடாக விசாரணை நடத்த அனுமதிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர், கடுவெல நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விபரங்களை வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவ ஆட்சியா? சிவில் ஆட்சியா நடைபெறுகிறது?

இராணுவத்தினர் முல்லைத்தீவில் தொடர்ந்தும் பொது மக்களின் காணிகளை சூறையாடி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட அபிவிருத்திக்குழு தீர்மான முடிவுகள் நிறைவேற்றப்படுகின்றதா என்று முல்லைத்தீவு ஊடக அணிஎழுப்பிய கோள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பிரதேசம் எமது மக்களுக்கான சுற்றுலா பிரதேசமாகவும் கடற்றொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இராணுவம் இன்று அபிவிருத்திக்குழு தீர்மானத்தையும் மீறி காணி அபகரிப்புக்கான வேலையை முன்னெடுத்துள்ளது.

ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நல்லாட்சி அரசின் சிவில் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்றதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் கோத்தபாயவின் போலி முகம் அம்பலம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கோத்தபாய வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜையான கோத்தபாயவின் பதிவு குறித்து சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தனது வாழ்த்து செய்தியில் தமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே தற்போது பெரிதளவில் பேசும் விடயமாக மாறியுள்ளது.

தேசம் என குறிப்பிடுவது அமெரிக்காவையா அல்லது இலங்கையையா என்பதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச சூழ்ச்சிகளை மேற்கொள்ள முயற்சிப்பது வேறு யாரும் அல்ல ராஜபக்சர்கள் என்பதனை இந்த பதிவின் ஊடாக மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தான் பிறந்த நாட்டை விட அமெரிக்காவை பெரிதாக நினைக்கும் இவ்வாறான இனவாதிகளின் உண்மை முகம் வெளியாகியுள்ளமையினால், கோத்தபாயவின் பொதுபல சேனா அமைப்புகளுக்கும் இனவாதமே முக்கிய நோக்கம் என்பதை மக்கள் தற்போது புரிந்தக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சிறிய ரக கார்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு

சிறிய கார்களை விற்பனை செய்வதற்கு வாகன விற்பனையார்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரவு செலவு திட்டத்தின் பின்னர் சிறிய வாகனங்களின் வரி குறைய கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெரியளவிலான தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுசுகி வாகனங்களை விற்பனை செய்யும் எஸோசியஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 2 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்க ஆரம்பித்துள்ளது.

சிறிய பென்டா கார்களை விற்பனை செய்யும் மைக்ரோ நிறுவனம் தங்களின் வாகனத்தின் விலையை ஒரு லட்சம் அளவில் குறைத்துள்ளது.

பொதுவாக கார் விற்பனையாளர்கள் வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் வரி அதிகரிக்க கூடும் எனவும் தற்போதே கொள்வனவு செய்துக் கொள்ளுமாறும் கூறுவார்கள். எனினும் இம்முறை அவர்கள் அமைதியாக உள்ளனர்.

அதிகமானோர் கார் கொள்வனவு செய்துக் கொள்ள கூடிய வரி முறையை முன்வைப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமையே இந்த அமைதிக்கு காரணம் என கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் cc10000க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்டுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

Toyota Premio, Toyota Allion and Honda Vezel – வாகனங்களின் விலைவில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து 220,000த்தில் இருந்து 384,000வரை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு காரணமாக உற்பத்தியாளர்களினால் விலை அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றது என்பதனை அறிய வேண்டுமா?

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன. இங்கு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறியும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக் கொண்டு உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆற்றல்கள்/சக்திகள்
நாம் எங்கு இருந்தாலும், நம்மைச் சுற்றி அங்கு சில ஆற்றல்கள் இருக்கும். வீடு என்பது ஒற்றுமைக்கான இடம். இங்கு அனைத்துவிதமான ஆற்றல்களும் சந்திக்கும். நமது உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் குறிப்பிட்ட ஆற்றல்களை உமிழும். அதே சமயம் குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும்.

உறவுகள்
குடும்ப உறுப்பினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டால், அது வாழ்க்கையையே பெரிதாக பாதிக்கும்.

விளைவுகள்
வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது மற்றும் வீட்டில் நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.

கெட்ட சக்தியை அறிய தேவையான பொருட்கள்
கண்ணாடி
டம்ளர்
கல் உப்பு

செய்யும் முறை:
கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும். முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது.
24 மணிநேரத்திற்கு பின்…
24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம். ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.

மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)

தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன்  சற்றுமுன்னர்  உருக்கமாக தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும்

நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்.

தேர்தலில் தோல்வியுற்றது வலி தான், இந்த வலி இன்னும் சில காலங்கள் இருக்கும். இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே குடிமக்களின் கடமை.

மேலும் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.