அமேஷான் சேவையை பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?

உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் வியாபார நிறுவனமாக விளங்கும் அமேஷான் தளமானது பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் வரிசையில் தற்போது வீடுகளுக்கு சென்று அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்கும் சேவை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

இச்சேவையினை அமேஷான் தளத்தில் ப்ரைம் மெம்பர் கணக்கு வைத்திருப்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

பொதுவாக வீட்டிலுள்ள தம்பதியர்கள் பணிக்கு செல்லும் சமயங்களில் தமது வீட்டினை பராமரிக்க மிகவும் சிரமப்படுவார்கள்.

இப்படியானவர்களை இலக்கு வைத்து இச் சேவையினை அமேஷான் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இச் சேவையின் பயனாக வீட்டு உரிமையாளர்கள் தமது வேலைச் சுமையினை குறைத்துக்கொள்ள முடியும்.

மேலும் இச்சேவையினைப் பெற விரும்புவர்கள் விண்ணப்ப படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக விண்ணப்பப்படிவம் விரைவில் ஒன்லைனில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞன்! தனி நபராக படைத்த சாதனை

உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கத்தால் பல காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அல்லல்படுகின்றனர்.

இதனையடுத்து மனித ஆர்வலர்கள் பலரும் செடிகள் நட்டு அதை காடுகளாக மாற்றி இயற்கையை இன்னும் வாழ வைத்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் இந்தியாவை சேர்ந்த Shubhendu Sharma என்னும் மனிதர்.

டோயோடா கார் நிறுவனத்தில் பொறியாளராக மிக அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்த இவர் மரம் வளர்ப்பு, காடுகள் உருவாக்குதல் போன்றவற்றுக்காக தன் வேலையையே உதறி தள்ளியுள்ளார்.

இதுவரை ஈராக், பாகிஸ்தான் உட்பட 6 நாடுகளில் உள்ள 28 நகரங்களில் 85க்கும் மேற்ப்பட்ட காடுகளை Shubhendu உருவாக்கியுள்ளார்!.

இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை மீது பிரியம் அதிகம். நான் வேலை செய்த நிறுவனத்தின் சுற்றுப்புறங்களில் மரங்கள் நடுவதற்கு Akira Miyawaki என்னும் தாவரவியல் பட்ட படிப்பாளர் தன் குழுவுடன் வந்தார்.

நானும் இது போல மரங்கள் நட்டு உலகை என்னால் முடிந்த வரை செழிப்பாக மாற்ற வேண்டும் என அவரிடன் கூறினேன், அதற்கு அவர் உதவினார்.

Miyawaki தொழில்நுட்பம் என்னும் முறையை அவர் சொல்லி தந்தார். அதாவது வித விதமான செடிகளை அந்த மண்ணின் தரம் அறிந்து ஒரு சிறிய இடத்தில் அருகருகே நடுவது தான் அந்த நுட்பமாகும்.

அதன் படி செடிகள் நடும் பணியை முதன் முதலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆரம்பித்தேன்.

பின்னர் பல மாநிலங்கள், நாடுகள் என என் மரம் நடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தரிசு நிலங்கள் அனைத்தும் பசுமையாக மாறும் வரை என் பணி தொடரும் என்கிறார் Shubhendu நம்பிக்கையுடன்!.625-0-560-350-160-300-053-800-668-160-90-7 625-0-560-350-160-300-053-800-668-160-90-8

ஹிலாரி கிளிண்டனை கைது செய்கிறாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்தபோது ராணுவ தகவல்களை தனது சொந்த மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது கிளிண்டன் அறக்கட்டளை மூலம் முறைகேடாக நிதிகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.

எனினும், ஹிலாரி கிளிண்டன் குற்றமற்றவர் என்றும் அவர் மீது விசாரணை நடத்த முடியாது என அந்நாட்டு புலனாய்வு துறை இயக்குனரான ஜேம்ஸ் கேமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த டொனால்ட் டிரம்ப் ‘ஹிலாரி பயன்படுத்திய 6,50,000 மின்னஞ்சல்களை வெறும் 8 நாட்களில் ஆய்வு செய்ய முடியாத நிலையில், அவரை எப்படி குற்றமற்றவர் என அறிவிக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டன் அரசு அதிகாரிகளால் மிக கவனமாக காப்பாற்றப்படுகிறார்.

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இவ்விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து தனி வழக்கறிஞரை நியமித்து விசாரணை செய்வேன். ஹிலாரி மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை சிறையில் அடைப்பேன்’ என அதிரடியாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று நடந்த முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், அவர் ஏற்கனவே கூறியதுபோல ஹிலாரி கிளிண்டனை விசாரணை செய்ய தனி வழக்கறிஞர் நியமிக்கப்படவுள்ளதாகவும் நேற்றே தகவல்கள் வெளியாகின.

இதுபோன்ற ஒரு சூழலில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான Josh Earnest என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதையை ஜனாதிபதியான ஒபாமா பொதுமன்னிப்பு வழங்குவாரா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்தபோது, ‘தற்போது மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சில கைதிகளுக்கு ஜனாதிபதி ஒபாமா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட நபர்களுக்கு(ஹிலாரி உள்பட) பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஹிலாரிக்கு ஒபாமா தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கினால் அவை ஹிலாரி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்துமா? என்ற சந்தேகத்தை அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.

எனினும், கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்தாலும் அல்லது கோரிக்கையை விடுக்காமல் இருந்தாலும், ஹிலாரிக்கு நிச்சயமாக ஒபாமா பொதுமன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில், கடந்த 1974ம் ஆண்டு Gerald Ford தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான Richard Nixon பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனாலும், தற்போது ஹிலாரி கிளிண்டன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒபாமா பொது மன்னிப்பு வழங்கினாலும், சில வாரங்களில் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பின் புதிய அரசாங்கம் வேறு வழக்குகளை ஹிலாரி மீது சுமத்தினால் அவற்றில் இருந்து ஹிலாரி தப்புவது கடினம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SVB Traders

svb_traders_01 svb_traders_02

ஜிம்முக்கு போகாமல் உடல் எடையை குறைக்க சூப்பர் ஐடியா இதோ!

நம் உடல் எடையை குறைக்கவும், உடலில் தேவையில்லாமல் உருவாகும் நோய்களை தடுக்கவும் நடைப்பயிற்சியை விட அருமையான விடயம் இருக்க முடியாது.

ஆனால் அதை சரியாக செய்தால் மட்டுமே அதன் பலனை முழுவதுமாக நாம் அனுபவிக்க முடியும்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு மணிநேரத்திற்கு 4 மைல்கள் என கணக்கு வைத்து நடந்தால் நம் உடலில் இருந்து 400 கலோரியை குறைக்கலாம்.

அதேபோல Pedometerஎன்னும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதை நம் வயிற்று பகுதியில் கட்டி கொண்டால் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை அந்த கருவி துல்லியமாக காட்டும்.

அதே போல எத்தனை படிகள் நாம் நடக்கிறோம் என்பது மிக முக்கியமாகும். ஒரு மைலுக்கு 2000 அடிகள் வைத்து நடந்தால் 100 கலோரிகளை நாம் குறைக்க முடியும்.

ஒரு பவுண்ட் 3500 கலோரி என வைத்து கொண்டால் ஒரு வாரத்தில் அந்த ஒரு பவுண்ட் அளவுக்கு நடந்தால் 500 கலோரியை நாம் நம் உடலில் இருந்து நீக்க முடியும்.

நாம் நடைபயிற்சி செய்யும் முறையும் நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது, நடக்கும் போது நம் பார்வை நேராக இருத்தல் அவசியம் மற்றும் வயிற்று பகுதியை இறுக்க வைத்து கொள்ள வேண்டும்.

நடைபயிற்சி செய்கையில், நம் தாடை பகுதியானது நிமிர்ந்த மேனியில் இருப்பது முக்கியமாகும்.

ஒருவர் புதிதாக நடைபயிற்சி செய்ய தொடங்கும் போது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் அதை செய்யலாம்.

பின்னர் அது பழகியவுடன் 30-60 நிமிடங்கள் என அதை அதிகபடுத்தி கொள்வது சரியானதாக இருக்கும்.

டிரம்பை வெறுக்கிறோம்…அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 276 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டது.

ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிய டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இவரின் இந்த வெற்றி ஹிலாரி ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் அமைந்துள்ள Berkeley என்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 1,000 பள்ளி மாணவர்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் ஒன்று திரண்டு டொனால்ட் டிரம்ப் எங்களின் ஜனாதிபதி கிடையாது என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பள்ளியினை தொடர்ந்து பிற பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறிய இவர்கள், சாலையில் வழியாக அணியாக திரண்டு சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Berenabas Lukas(15) என்ற மாணவி கூறியதாவது, டொனால்ட் டிரம்ப ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளதால் எங்களின் பாதுகாப்பு குறைந்துள்ளதாக உணர்கிறோம். அவரை எங்களின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்பை நாங்கள் வெறுக்கிறோம், அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.625-0-560-350-160-300-053-800-668-160-90-4 625-0-560-350-160-300-053-800-668-160-90-5 625-0-560-350-160-300-053-800-668-160-90-6

இங்கிலாந்தில் இனிப்பு பானங்களின் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை

உடல் பருமனை குறைத்து மக்களின் உடல் நலனை பேணும் வகையில் அனைத்து இனிப்பு பானங்களினதும் விற்பனையை தடை செய்வது குறித்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு பரிசீலனை செய்து வருகின்றது.

இத்திட்டத்தை எதிர்வரும் ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ள அதேவேளை, இதனை வைத்தியசாலைகளில் இருந்து ஆரம்பிக்க எதிர்ப்பார்த்திருப்பதாக சுகாதார சேவைகள் அமைப்பின் தலைவர் சைமன் ஸ்டீவன்ஸ் தெரிவித்தார்.

உடல் பருமன் என்பது நாட்டில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினையை சமாளிக்கும் வகையிலேயே இனிப்பு பானங்களுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாகவே வைத்தியசாலைகளில் இனிப்பு பானங்கள் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இவ்விற்பனை தடை செய்யப்படும் அல்லது இனிப்பு பானங்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்றும் ஸ்டீவன்ஸ் குறிப்பிட்டார்.

ஆறு வயது சிறுவன் கடவுளின் அவதாரமா?

ஆறு வயது சிறுவன் ஒருவன் கடவுளின் மறுபிறவியாக பார்க்கப்படும் ஆச்சரிய நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ்.

இவரின் மகனான பிரன்சு (6) பிறக்கும் போதே அவனுக்கு ஏற்பட்ட விசித்திர நோய் தாக்கத்தின் காரணமாக தலை பெரியதாகவும், குறுகிய கண்களுடன் வாழ்ந்து வருகிறான்.

அந்த சிறுவனால் சரியாக நிமிர்ந்து நடக்க முடியாது. சிறுவன் பிரன்சுவின் உருவத்தை வைத்து அவர் இந்து கடவுளான விநாயகரின் மறுபிறவி என மக்கள் அவனை வணங்கி வருகிறார்கள்.

இது பற்றி பிரான்சுவின் தந்தை கமலேஷ் கூறுகையில், பிறக்கும் போதே பிரான்சு இப்படி தான் பிறந்தான்.

அவன் பிறந்த பின்னர் நாங்கள் அவனை பல மருத்துவர்களிடம் காண்பித்தோம். ஆனாலும் அவன் உருவம் எல்லாரும் போல சாதாரணமாக ஆகவில்லை.

அவனை சிறு வயதிலிருந்தே நான் உட்பட இந்த ஊரில் இருப்பவர்கள் விநாயக கடவுளின் மறுபிறவியாக தான் பார்க்கிறோம்.

அவனும் எல்லாரும் போல தினமும் பள்ளிகூடத்திற்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளான் மற்றும் என் மகன் உடல் அமைப்பு கூட விநாயக கடவுள் போல தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிரான்சு கோவில் வாசலில் உட்காருவான். அவனிடம் பொது மக்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சிறுவன் பிரான்சு கூறுகையில், என் பெயர் கூட இங்கு நிறைய பேருக்கு தெரியாது.

எல்லோரும் என்னை கணேசா என தான் அழைப்பார்கள். என் பள்ளி ஆசிரியர்களும், உடன் படிக்கும் மாணவர்களும் என்னை வணங்குவார்கள், அவர்களை ஆசிர்வதிப்பேன் என கூறியுள்ளான்.

சிறுவன் பிரான்சுக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என்பதும், அவர்களின் ஒரு சகோதரருக்கு இதே போன்ற விசித்திர உடல் பிரச்சனை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரவன்சவின் வீட்டில் இளைஞன் மரணம் – தொலைபேசிகளின் ஊடாக விசாரணை தீவிரம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த மரணம் தொடர்பில் ஏழு தொலைபேசி அழைப்புக்கள் வழியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி 24 வயதான லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மூன்று தொலைபேசி நிறுவனங்களின் இலக்கங்கள் ஊடாக விசாரணை நடத்த அனுமதிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர், கடுவெல நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விபரங்களை வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவ ஆட்சியா? சிவில் ஆட்சியா நடைபெறுகிறது?

இராணுவத்தினர் முல்லைத்தீவில் தொடர்ந்தும் பொது மக்களின் காணிகளை சூறையாடி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட அபிவிருத்திக்குழு தீர்மான முடிவுகள் நிறைவேற்றப்படுகின்றதா என்று முல்லைத்தீவு ஊடக அணிஎழுப்பிய கோள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பிரதேசம் எமது மக்களுக்கான சுற்றுலா பிரதேசமாகவும் கடற்றொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இராணுவம் இன்று அபிவிருத்திக்குழு தீர்மானத்தையும் மீறி காணி அபகரிப்புக்கான வேலையை முன்னெடுத்துள்ளது.

ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நல்லாட்சி அரசின் சிவில் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்றதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் கோத்தபாயவின் போலி முகம் அம்பலம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கோத்தபாய வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜையான கோத்தபாயவின் பதிவு குறித்து சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தனது வாழ்த்து செய்தியில் தமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே தற்போது பெரிதளவில் பேசும் விடயமாக மாறியுள்ளது.

தேசம் என குறிப்பிடுவது அமெரிக்காவையா அல்லது இலங்கையையா என்பதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச சூழ்ச்சிகளை மேற்கொள்ள முயற்சிப்பது வேறு யாரும் அல்ல ராஜபக்சர்கள் என்பதனை இந்த பதிவின் ஊடாக மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தான் பிறந்த நாட்டை விட அமெரிக்காவை பெரிதாக நினைக்கும் இவ்வாறான இனவாதிகளின் உண்மை முகம் வெளியாகியுள்ளமையினால், கோத்தபாயவின் பொதுபல சேனா அமைப்புகளுக்கும் இனவாதமே முக்கிய நோக்கம் என்பதை மக்கள் தற்போது புரிந்தக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சிறிய ரக கார்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு

சிறிய கார்களை விற்பனை செய்வதற்கு வாகன விற்பனையார்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரவு செலவு திட்டத்தின் பின்னர் சிறிய வாகனங்களின் வரி குறைய கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெரியளவிலான தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுசுகி வாகனங்களை விற்பனை செய்யும் எஸோசியஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 2 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்க ஆரம்பித்துள்ளது.

சிறிய பென்டா கார்களை விற்பனை செய்யும் மைக்ரோ நிறுவனம் தங்களின் வாகனத்தின் விலையை ஒரு லட்சம் அளவில் குறைத்துள்ளது.

பொதுவாக கார் விற்பனையாளர்கள் வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் வரி அதிகரிக்க கூடும் எனவும் தற்போதே கொள்வனவு செய்துக் கொள்ளுமாறும் கூறுவார்கள். எனினும் இம்முறை அவர்கள் அமைதியாக உள்ளனர்.

அதிகமானோர் கார் கொள்வனவு செய்துக் கொள்ள கூடிய வரி முறையை முன்வைப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமையே இந்த அமைதிக்கு காரணம் என கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் cc10000க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்டுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

Toyota Premio, Toyota Allion and Honda Vezel – வாகனங்களின் விலைவில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து 220,000த்தில் இருந்து 384,000வரை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு காரணமாக உற்பத்தியாளர்களினால் விலை அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றது என்பதனை அறிய வேண்டுமா?

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன. இங்கு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறியும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக் கொண்டு உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆற்றல்கள்/சக்திகள்
நாம் எங்கு இருந்தாலும், நம்மைச் சுற்றி அங்கு சில ஆற்றல்கள் இருக்கும். வீடு என்பது ஒற்றுமைக்கான இடம். இங்கு அனைத்துவிதமான ஆற்றல்களும் சந்திக்கும். நமது உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் குறிப்பிட்ட ஆற்றல்களை உமிழும். அதே சமயம் குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும்.

உறவுகள்
குடும்ப உறுப்பினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டால், அது வாழ்க்கையையே பெரிதாக பாதிக்கும்.

விளைவுகள்
வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது மற்றும் வீட்டில் நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.

கெட்ட சக்தியை அறிய தேவையான பொருட்கள்
கண்ணாடி
டம்ளர்
கல் உப்பு

செய்யும் முறை:
கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும். முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது.
24 மணிநேரத்திற்கு பின்…
24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம். ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.

மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)

தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன்  சற்றுமுன்னர்  உருக்கமாக தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும்

நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்.

தேர்தலில் தோல்வியுற்றது வலி தான், இந்த வலி இன்னும் சில காலங்கள் இருக்கும். இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே குடிமக்களின் கடமை.

மேலும் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சவூதியில் இலங்கை பெண்களுக்கு ஏற்பட்ட அவலம்! காணொளி!

முத்தம் கொடுத்த உதவி இயக்குனரை டி.வி. நடிகை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

தனக்கு முத்தம் கொடுத்த உதவி இயக்குனரை டி.வி. நடிகை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.வி. நடிகை

மும்பையை சேர்ந்த இந்தி டி.வி. நடிகை அமன் சந்த்(வயது26). இவர் பல டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரை, கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா உதவி இயக்குநர் தீபக் மிஸ்ரா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் டி.வி. நடிகைக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், அது குறித்து நேரில் பேசவேண்டும் என கூறி அழைத்தார்.

இதையடுத்து டி.வி. நடிகை அமன் சந்த், உதவி இயக்குனர் தீபக்மிஸ்ராவை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள காப்பி ஷாப்பில் சந்தித்து பேசினார்.

கன்னத்தில் அறைந்தார்

அப்போது தீபக் மிஸ்ரா, அமன் சந்துவிடம் தற்போது நாங்கள் பல திரைப்படங்களை இயக்கி வருகிறோம். அந்த படங்களில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். அதற்காக நீங்கள் என்னுடனும், இயக்குனருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறியதாக தெரிகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அமன்சந்த் அங்கு இருந்து எழுந்து செல்ல முயன்றார். அப்போது உதவி இயக்குநர், அமன்சந்தின் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமன் சந்த், தீபக்மிஸ்ராவின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அமன் சந்த் ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 வயதில் கர்ப்பம்! பச்சிளம் சிசுவை கொன்ற கொடூர சிறுமி: பதற வைக்கும் சம்பவம்!

பிரான்சில் 16 வயது சிறுமி ஒருவர் தனது கர்ப்பத்தை மறைக்க பெற்றெடுத்த சிசுவை கொன்று ஜிம் பையில் மறைத்து தெருவில் வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lille நகர Bois-Blancs மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த சிறுமி மீது சிசுக்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்ப்பததை மறைத்து வந்த சிறுமி கடந்த அக்டோபர் 22ம் திகதி வீட்டு குளியல் தொட்டியில் குழந்தையை பெற்றெடுத்து வேண்டுமென்றே இறக்க அனுமதித்துள்ளார்.

பின்னர், உடலை மறைக்க நண்பர் ஒருவரை அழைத்துள்ளார். ஆனால், குறித்த நண்பர் உதவ மறுத்துள்ளார்.

பிறகு, கர்ப்பத்திற்கு காரணமான மற்றொரு நண்பனை அழைத்துள்ளார். இதனையடுத்து, குழந்தையின் உடலை ஜிம் பைக்குள் மறைத்து முற்றத்தில் வீசி விட்டு சென்றுள்ளார்.

குழந்தையின் உடலை கண்டெடுத்த பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், முதல் நண்பரால் குற்றவாளி சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது, குற்றச்சாட்டப்பட்டுள்ள சிறுமி ஒரு கல்வி மையத்தில் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனத்தில்தான் ஜனாதிபதி டிரம்ப் பயணம் மேற்கொள்வார்: வெளியானது புகைப்படம்

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு பதவியேற்பதை முன்னிட்டு அவருக்காக பிரத்யேக வாகனம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

‘The Beast’ என்ற புனைப்பெயரில் அறியப்படும் குறித்த வாகனமானது தற்போது பரிச்சார்த்தமாக செயல்படுத்தி பார்க்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் குறித்த வாகனத்தை அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட உள்ளது.

இதற்காக General Motors நிறுவனம் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க குறித்த வல்லுநர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜானதிபதியின் அதிகாரப்பூர்வ வாகனமானது கறுப்பு வண்ணத்திலே இருக்கும், ஆனால் தற்போது பரிச்சார்த்தமுறையில் இருப்பதால் வேறுபட்ட வண்ணத்தில் குறித்த வாகனம் வீதி வலம் வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமா பயன்படுத்திய காரில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த காரிலும் இருக்கும் என்றாலும், தற்கால தேவைக்கு ஏற்ற வகையில் சிறு மாறுதல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் எந்தெந்த வசதிகள் உள்ளடக்கியுள்ளனர் என்பது குறித்த தகவல்களை மிக ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

இதுவரை எந்த வாகன கட்டுமான நிறுவனமும் இதுகுறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றபோதும் General Motors நிறுவனத்திற்கு 3 வாகனம் வடிவமைத்து கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் கிட்டியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மட்டுமின்றி குறித்த நிறுவனத்திற்கு 15 மில்லியன் டொலர் கட்டணமும் செலுத்தியுள்ளதாக தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று வீதம் 12 கார்களை 12 நகரங்களில் நிறுத்தி பராமரிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென வாகனம் ஒன்றிற்கு 1.5 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமா பயன்படுத்தும் காரானது மொத்தமாக 8 டன் எடை கொண்டது எனவும் இது Boeing 747 விமானத்தின் கதவின் எடைக்கு சமானம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய ராசி பலன் 10-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: மாலை 5.30 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

  • துலாம்

    துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்
    பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • மகரம்

    மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

  • கும்பம்

    கும்பம்: மாலை 5.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மாலை 5.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

 

மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா? விசித்திர வழக்கை சந்தித்த நீதிமன்றம்

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் உரத்த குரலில் பாடல்கள் பாடியதாக கூறி அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் லாசன்னே நகரில் குறித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. கடந்த யூன் மாதம் ஒரு மாலை நேரத்தில் குறித்த பெண்மணி ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு தனக்கு மிகவும் பிடித்தமான ‘I Feel Good’ பாடலை மிகவும் மகிழ்ச்சியுடம் உரத்த குரலில் பாடியபடியே நடந்து சென்றுள்ளார்.

30 வயதான குறித்த கொசோவோ பெண்மணி சுரங்கப்பதை ஒன்றை கடக்க முயன்றபோது 4 பொலிஸ் அதிகாரிகள் வந்து இடைமறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.

சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்படவில்லை. ஆனால் நடைபாதை வழியே உரத்த குரலில் பாடுவது பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்த வேடிக்கையான ஒன்று என வழக்கினை வாதிட்ட வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்டனத்துக்கு உள்ளாகும் வகையில் செயல்படுவது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள், வாரந்தோறும் இதுபோன்ற கண்டனங்கள் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடியே குறித்த பெண்மணி தண்டனைக்குரிய குற்றம் எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

மட்டுமின்றி உரிய ஆவணங்கள் ஏதுமின்றி வசித்துவரும் மக்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்கி நாடுகடத்தப்படுவார்களோ என்ற அச்சத்தில் வாழ்ந்துவருவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.